நார்வே,
நார்வே நாட்டு அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப பல்கலை கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் உடல் பருமன்
குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், தங்களை தாங்களே அதிக பருமன்
உள்ளவர்கள் என நினைப்பவர்கள் மற்றவர்களை காட்டிலும் அதிக உடல் எடை
கொண்டவர்களாக வளர்கின்றனர். இது உளவியல் அடிப்படையில் ஏற்படும் அழுத்தம்
காரணமாக உண்டாவதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் அவர்களின் இடை பகுதி
விரிவடைகிறது. மேலும், அவர்கள் மேற்கொள்ளும் சரிவிகிதமற்ற உணவு,
காலை உணவை தவிர்த்தல் ஆகியவை காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பதாக
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment