ஒருமுறை கேரள சுற்றுப்பயணம்
சென்றிருந்த்போது கணவரின் வியாபார நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது.. அவர்
தன் இல்லத்திற்கு அழைப்புவிடுத்தார்..
""நான் தங்கள் இல்லத்திற்குப்
பலமுறை வியாபார ரீதியில் வந்திருக்கிறேன்.. என்னைப் பற்றி ஒருவார்த்தைகூட
விசாரிக்காமல் ஒவ்வொருமுறையும் நன்கு உபசரித்திருக்கிறீர்கள்..என்
மனைவியிடமும் தங்களைப்பற்றி சொல்லியிருக்கிறேன்..அவர் உங்கள் குடும்பத்தைப்
பார்த்தால் மிகவும் சந்தோஷப்படுவார்.. அவசியம் இல்லத்திற்கு
வரவேண்டும்""..என்று என்னிடம் கூறி அழைத்துசென்றார்..
அரண்மனை போன்ற மிகப்பெரிய இல்லம்..
அருமையான லக்ஷ்ணமான பசுமாடுகளும் கன்றுக்குட்டிகளுமாக லக்ஷ்மீகரமான அமைப்புடன் கொட்டில் கவனத்தை ஈர்த்தது....
அருமையான லக்ஷ்ணமான பசுமாடுகளும் கன்றுக்குட்டிகளுமாக லக்ஷ்மீகரமான அமைப்புடன் கொட்டில் கவனத்தை ஈர்த்தது....
வில்வமரம் கிளைபரப்பி பழங்களுடன்
காட்சியளித்தது வீட்டுத்தோட்டத்தில்..அந்த மாடுகளும் கன்றுகளும்
வில்வப்பழத்தை மிக விரும்பிச்சாப்பிட்டது ஆச்சரியப்படுத்தியது..
அத்தனை பெரிய செல்வந்தர்களாக
இருந்த போதிலும் கூட்டுக்குடும்பத்தில் அந்த சகோதரர்கள் தாங்களே அந்த
மாடுகளையும் கன்றுகளையும் அதிகாலையில் குளிப்பாட்டி பூஜை செய்வார்களாம்..
வீட்டுத்தோட்டத்தில் ஜாதிக்காய் மரம் செழித்து வளர்ந்திருந்தது..
லவங்கப்பட்டை மரங்கள் பூத்துக்குலுங்கின..
அந்த
மரத்தில் ஆண்மரம் என்றும் பெண்மரம் என்றும் இருப்பதாகவும் நிறையப்பேர் அது
தெரியாமல் ஒரே வகையான மரம் வளர்த்து பூக்கள் காயாகாமல் இருப்பதாகவும்
குறிப்பிட்டார்..அவை வளர்ந்து பூக்கும் தருணத்திலேயே இனம் காணமுடியுமாம்..
அதிர்ஷ்ட்ட வசமாக அவர் நட்ட இரண்டு மரங்களும் ஆண் மற்றும் பெண் மரமாக அமைந்ததில் பரம சந்தோமும் லாபமும் அவருக்கு..
அதன் இலைகள் பிரியாணியில் சேர்க்கும் பிரியாணி இலையாம்..
அஞ்சறைப் பெட்டி அருமருந்துகளின் பெட்டகம்..
சமையல் அறையில் நம் முன்னோர்கள் ஒரு வைத்திய சாலையையே வைத்திருந்தார்கள்
உணவே மருந்து மருந்தே உணவு என்ற கோட்பாடு தலைதூக்கி பல்வேறு வகைகளில் இதை பாடங்களாகவும், ஆலோசனைகளாகவும் செய்துவருகின்றனர்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
என்ற பழமொழிக்கேற்ப இந்த குறைவற்ற செல்வத்தைப் பெற உணவில் சீரகம், சோம்பு,
வெந்தயம், கடுகு, மிளகு, இலவங்கப்பட்டை, கசகசா என பல மருத்துவப் பொருட்களை
அன்றாட உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர்கள்
நம் முன்னோர்கள்.
கருவாப் பட்டை என அழைக்கப்படும்
இலவங்கப் பட்டை செடி இலங்கைக்கும், இந்தியாவிற்கும் உரிய பயிராகும்.
இந்தியாவில் கேரளா பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றது.
தமிழில் லங்கப்ப்ட்டை
ஆங்கிலத்தில்- Cinnamon
மலையாளத்தில் கருவாப்பட்டை
தெலுங்கில் லங்கப்ப்ட்டா
Sanskrit - Twak
Hindi - Dalchini
BotanicalName - Cinnamomum verum என்றும் அழைக்கப்டும் அருமருந்து..
இலவங்கப்
பட்டை உற்பத்தியில் இலங்கையே முதன்மை வகிக்கிறது. இலங்கை, மேற்கு
மலேசியாவின் சாபா, சரவா பகுதிகளிலும் தாய்லாந்தின் வடக்குப் பகுதியிலும்
இது உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப் படுகின்றது.
இதன் பட்டை அரக்கு நிறத்தில் காணப்படும். காரமும் இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும்.
அகத்தியர் குணபாடம்
தாதுநட்டம் பேதி சருவவிஷம் ஆகியநோய்
பூதகிர கஞ்சிலந்திப் பூச்சிவிடஞ்-சாதிவிடம்
ஆட்டுமிரைப் போடிருமல் ஆகியநோய்க் கூட்டமற
ஓட்டுமில வங்கத் துரிசன்னலவங் கப்பட்டை தான் குளிர்ச்சி யுண்டாக்கும்
இன்னுமிரத் தக்கடுப்பை யீர்க்குங்காண்-முன்னமுறும்
உந்திக் கடுப்பகற்றும் உண்மூலப் புண்போக்கும்கந்தமிகு பூங்குழலே! காண் -- என்றுரைக்கிறது...
லவங்கப்பட்டையை கறிமசாலாவில் அதிகம் சேர்ப்பார்கள். இது அதிக சுவையையும், மணத்தையும் தரக்கூடியது.
நீரிழிவு நோய்க்கு
நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது.
வாய் துர்நாற்றம் நீங்க
வயிற்றில் புண்கள் இருந்தால் அதன்
பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான
துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் லவங்கப்பட்டையைச்
சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.
செரிமான சக்தியைத் தூண்ட
எளிதில் சீரணமாகாத உணவுகளை
உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண்,
மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில்
லவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான
சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.
இருமல், இரைப்பு
சளித்தொல்லையால் சிலர் வறட்டு
இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு
ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம்,
கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு
கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து
வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால்
இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.
விஷக்கடிக்கு
சிலந்திக்கடி மற்றும் விஷப்
பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது
பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.
வயிற்றுக் கடுப்பு நீங்க
வயிற்றுக் கடுப்பால்
அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான
வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து
சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும்
சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை
குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.
பெண்களுக்கு
குழந்தை பிறந்தவுடன்
தாய்க்கு சிறந்த மருந்தாக.கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால்
வெகு விரைவில் சாதாரண நிலைக்கு வருவார்கள்..
லவங்க பட்டை சிறந்த மருத்துவ குணம் கொண்டது. ஒரு ஸ்பூனில் கால் பங்கு, அதாவது, ஒரு கிராம் அளவிற்கு உட்கொண்டால் போதும்,
நீரிழிவு நோய் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.
ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்து விடும்.
அமெரிக்க விவசாய துறையைச் சேர்ந்த
ஆராய்ச்சியாளர்கள் தான். லவங்க பட்டையின் மருத்துவ குணம் பற்றி நீண்ட
ஆராய்ச்சி செய்து இவ்வாறு கண்டுபிடித்து இருக்கின்றனர்.
நீரிழிவு முற்றிய நிலையில் உள்ள 60 நோயாளி களுக்கு, தினமும் ஒரு கிராம் முதல் ஆறு கிராம் வரை லவங்க பட்டையை கொடுத்து வந்தனர்.
40 நாட்களுக்குப் பின்னர் அவர்கள் ரத்தம் சோதித்து பார்க்கப்பட்டது.
* 18 முதல் 29 சதவீதம் சர்க்கரை அளவு குறைந்து இருந்தது.
* 23 முதல் 30 சதவீதம் கொழுப்பு அளவு குறைந்து இருந்தது.
* இதய நோய் மற்றும் வாதம் ஏற்படுத்தும் கொழுப்பின் அளவு ஏழு முதல் 23 சதவீதம் குறைந்து இருந்தது.
அமெரிக்காவில்
மேரிலேண்டில் உள்ள விவசாயத்துறையின் மனித ஆராய்ச்சி மற்றும் சத்து
மையத்தைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் ஆன்டர்சன் என்பவர் இந்த ஆராய்ச்சியை
மேற்கொண்டார்.இந்த ஆய்வின் அடிப்படையில் தினமும் கால் அல்லது அரை டீஸ்பூன்
அளவு லவங்க பட்டை பொடியை சேர்த்துக் கொள்ளுமாறு நீரிழிவு நோயாளிகளுக்கு
பரிந்துரைக்கிறார் ரிச்சர்ட் .
கலிபோர்னியா
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிர் ரசாயன பேராசிரியர் டான் கிரேவ்ஸ்
என்பவரும் லவங்க பட்டையின் மருத்துவ குணத்தை ஆதரித்துள்ளார். இன்சுலினுக்கு
சமமானது லவங்க பட்டை என்கிறார் அவர்.
நம் நாட்டில் மாமிச உணவை
சமைப்பவர்கள் அதில் லவங்க பட்டையை தவறாமல் சேர்ப்பர். கொழுப்பு சத்து
சேராமல் தடுக்கத்தான் அவ்வாறு சேர்க்கின்றனர் என்பது இந்த ஆராய்ச்சியின்
மூலம் தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்த பட்டைப்பொடியின் உபயோகம் அதிகம் இருப்பதை கண்டேன்.. சர்க்கரையுடன் கலந்து தூவி கொடுக்கிறார்கள்
சுவையும், மணமும் அருமையாக இருக்கிறது..
காலையில் பட்டைப்பொடியும் , தேனும், எலுமிச்சை சாறும் சேர்த்து ஆரோக்கிய பானமாக அருந்துகிறார்கள்..
ஆக பட்டையை உணவில் சேர்த்து பட்டையைக் கிளப்புவோம்!
lemons, lemonade, honey, comb, cinnamon, drinks, cup, mug, cloves, ..
muscle recovery, black tea, cinnamon, Drinktea
cinnamon drink
Cinnamon And Orange Pudding
Cinnamon Nutmeg Waffles
No comments:
Post a Comment