Sep 23, 2012

சூரிய சக்தியில் இயங்கும் சோலார் ரிக்ஷாவை கண்டுபிடித்து தமிழக மாணவன் சாதனை..

திருப்பூரை சேர்ந்த சிவராஜ் முத்துராமன் எம்.பி.ஏ என்ற மாணவர் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத புதிய ஆட்டோ ரிக்ஷாவை உருவாக்கி Eco free cab என்று பெயரிட்டுள்ளார். மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால் 45 மைல் வேகத்தில் 150 கி.மீ வரை 3 பேர் வரை பயணம் செய்யலாம்

. மின்சக்தி முடிவடைந்தால் சைக்கிளை ஓட்டுவது போன்று பெடலிங் செய்து ஓட்ட முடியும்.
இது குறித்து உருவாக்கிய சிவராஜ் கூறுகையில், இதனை தயாரிக்க 3 ஆண்டுகள் ஆகியும் முதலில் பல தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்து பின் அவற்றை சரி செய்து தற்போது
இதற்கான தொழில்நுட்பத்தை ippothu உருவாக்கிவிட்டேன் என்றும் வணிக ரீதியில் 80,000 ரூபாயில் விற்பனைக்கு கொண்டு வரமுடியும் என தெரிவித்தார்.
மேலும் பராமரிப்பு செலவு முற்றிலுமாக இருக்காது என்றும், தனது இந்த கண்டுபிடிப்புக்கு இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் கீழ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
Back to News   Bookmark and Share Seithy.com

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...