Oct 1, 2012

பிரம்மபுத்திரா ஆற்றில் கடும் வெள்ளம்: 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு [ திங்கட்கிழமை, 01 ஒக்ரோபர் 2012,



வட மாநிலமான மேகாலயாவில் பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேகாலயாவில் இதுவரை 15 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை காலி செய்து விட்டு அரசு அமைத்துள்ள 14 நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன.
பாய்த்பரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களான மோராசுதி,
பெர்ஷாகண்டி, அந்தர்காடா, ராஜபாலா, பாக்சி ஆகிய பகுதிகள் வெள்ளப்பெருக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சுகாதார மையங்கள் மற்றும் காவல் சோதனைச்சாவடி ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள் உணவுகள் முழுவீச்சில் வழங்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...