Oct 1, 2012

போதிய இடைவெளி விட்டு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்


வெள்ளிக்கிழமை, 28 செப்ரெம்பர்
உடல் எடையை குறைப்பதாக கூறி அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து என்கின்றனர் ஆய்வாளர்கள்.லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் உடல்பருமனை குறைப்பதற்கான வழிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இங்கிலாந்து, ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு ஒரே கலோரி அளவுள்ள உணவு 6 முதல் 9 முறை கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.
ஆய்வு அறிக்கையில், 3 வேளையை 2 வேளையாக குறைப்பதாக கூறி அதிகமாக சாப்பிடுவது ஆபத்து. கொஞ்சம், கொஞ்சமாக 9 முறை சாப்பிடுவதால் ரத்தக்கொதிப்பு, கொழுப்பு கட்டுப்படும்.
உடல் எடையும் சீராகும். உண்ணும் உணவு ஊட்டச்சத்துள்ளதாக இருக்க வேண்டும், குறைவாக போதிய இடைவெளி விட்டு சாப்பிட வேண்டும்.
இயற்கை உணவுகளை அதிகரித்து கொழுப்பு உணவை தவிர்ப்பது நல்லது. உடற்பயிற்சியும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...