Oct 1, 2012

Lipstick பயன்படுத்தும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை


சனிக்கிழமை, 29 செப்ரெம்பர்
வேலைக்கு செல்பவர்களோ, இல்லத்தரசிகளோ திருமணம் மற்றும் விழாக்களுக்கு செல்லும் போது Lipstick இன்றி வெளியே கிளம்புவதில்லை.அவர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் புதிதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.
Lipstickக்கில் உள்ள ரசாயனத்தினால் இருதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். Lipstickக்கில் உள்ள டிரைக்ளோசன்(triclosan) என்ற ரசாயனம் வீட்டு உபயோக சுத்தம் செய்யும் பொருட்களில் அனைத்திலும் உள்ளது.
இந்த ரசாயனம் இருதயம் உட்பட மூளையிலிருந்து செய்திகளை வாங்கும்
தசைகளின் செயல்பாடுகளை முடக்குவதாக இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
எலிகளை வைத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. எலிகளுக்கு டிரைக்ளோசன் கொடுக்கப்பட்ட 20 நிமிடத்திலேயே அவைகளின் இருதயச் செயல்பாடுகள் படிபடிப்படியாக குறைந்தது.
இதுவே மனித உடல்களிலும் நடக்கலாம் என்று இவர்கள் எச்சரித்துள்ளனர். டிரைக்ளோசன் அனைத்திலும் உள்ளது, சுற்றுப்புறச் சூழலில் உள்ளது. இது மனித உடலுக்கு மட்டுமல்லாது, சுற்றுச்சூழலுக்கே கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறுகின்றனர்.
ஆனாலும் எலிகளில் பரிசோதனைக்காக ஏற்றப்பட்ட டிரைக்ளோசன் அளவுகள் அதிகம், ஆனால் Lipstick உள்ளிட்ட பொருட்களில் உள்ள இந்த ரசாயனத்தின் அளவு மிகக்குறைவே என்று இந்தப் பொருட்களின் தயாரிப்பாளர்கள் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஏற்க மறுத்து வருகின்றனர்.
மருத்துவமனைகளில் இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது பாக்டீரியா நுண்ணுயிரித் தாக்கத்தை இது தடுப்பதாகவே டாக்டர்கள் கருதுகின்றனர்.
ஆனால் கலிபோர்னியா விஞ்ஞானிகளோ இந்த ரசாயனத்தின் தாக்கம் உடல் உறுப்புகளிலும் விளைவை ஏற்படுத்தும் என்று உறுதியாக கூறுகின்றனர்.
டிரைக்ளோசன் பற்றி ஏதோ இப்போது புதிதாக கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னதாக இந்த ரசாயனத்திற்கும் தைராய்டு பிரச்சனை மற்றும் மலட்டுத் தன்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தசைகளில் இதன் தாக்கம் பற்றி இப்போதுதான் ஆராய்ப்படுகிறது.
நல்ல இருதய ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு இந்த ரசாயனத்தினால் 10% இருதயச் செயல்பாடு குறைந்தால் தெரியாது. ஆனால் இருதயப்பிரச்சனைகள் ஏற்கனவே உள்ளவர்களுக்கு 10% செயல்பாட்டுக் குறைவு என்பது ஆபத்துதான் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...