Oct 1, 2012

ஆதீன சொத்துக்கள் ரூ.500 கோடியை சாப்பிட்டு ஏப்பம் விட்ட மூத்த ஆதீனம் [ சனிக்கிழமை, 29 செப்ரெம்பர் 2012



மதுரை ஆதீனத்தின் மூத்த தலைவர் அருணாகிரி சுவாமிகள், மடத்தின் சொத்துக்களில் ரூ.500 கோடி அளவில் மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
சுவாமி நித்தியானந்தா ஆதீன மடத்திற்கு இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட பின்னர், ஆதீனம் அருணாகிரி சுவாமிக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மதுரை ஆதீன மடம் மீட்புக்குழு தலைவர் திருமாறன், மதுரை மாவட்ட பொலிஸ் கொமிஷனர் சஞ்சய் மாத்தூரிடம்
புகார் அளித்தார்.
அதில், மதுரை ஆதீனமாக உள்ள அருணாகிரிநாதர், மடத்தின் நற்பெயரையும், புகழையும் சீர்குலைத்ததுடன், பல்வேறு மோசடி வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
ஆதீன மடத்துக்கென மதுரை நகரில் தெற்கு ஆவணி மூல வீதி, நகைக்கடை பஜார், கூடம் சாமியார் சந்து, வெள்ளியங்குன்றம், திருப்பரங்குன்றம், திருநெல்வேலி, பழநி, திருச்செந்தூர் உள்ளிட்ட 20 இடங்களில் சொத்துகளும், கடைகளும் உள்ளன.
கடந்த 32 ஆண்டுகளாக வாடகை உட்பட பல்வேறு வழிகளில் 500 கோடி வரை பணம் கிடைத்துள்ளது.
இந்த சொத்தை அனுபவித்து மதுரை ஆதீனம் மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் திருமாறன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...