Nov 3, 2012

கி.மு 4700 ஆண்டுகள் பழமையான நகரம் பல்கேரியாவில் கண்டுபிடிப்பு!

கி.மு 4700 ஆண்டுகள் பழமையான நகரம் பல்கேரியாவில் கண்டுபிடிப்பு!
[Friday, 2012-11-02
News Service ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல்கேரியா நாட்டில் கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய 4700 ஆண்டுகள் பழமையான நகரம் ஒன்றை அகழ்வாராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர்.அந்த நாட்டின் புரோவாடியா நகருக்கு அருகே பூமிக்கடியில் இருந்த சுற்றுச்சுவருடன் கூடிய ஒரு 2 அடுக்கு மாடி வீடு மற்றும் கல்லறைகளை அவர்கள் தோண்டியெடுத்துள்ளனர்.
  
கி.மு. 4700 - 4200 ஆண்டுகள் வரை பழமையானதாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள இந்த நகரில் 350 குடும்பங்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.இந்த இடம் உப்பு உற்பத்தி மையமாக இருந்திருக்க வேண்டும். இங்குள்ள நீரூற்று தண்ணீரை கொதிக்க வைத்து உப்பு செங்கற்களை அவர்கள் உற்பத்தி செய்து, இறைச்சியை பாதுகாப்பதற்கு அதை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த நகரத்தை நிர்மாணிக்க உதவிய
இந்த உப்புக்கு அப்போது நல்ல மவுசு இருந்திருக்கிறது. அதை அவர்கள் வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதியும் செய்திருக்கிறார்கள்.
கடந்த 40 வருடங்களுக்கு முன்பு இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தங்க குவியலுக்கும் தற்போதைய கண்டுபிடிப்பிற்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உலகின் பழமையான நாகரீகமான கிரேக்க நாகரீகத்திற்கும் 1500 ஆண்டுகள் இது பழமையானது என்று கூறப்படுகிறது. ரோமானியா மற்றும் பல்கேரியா பகுதிகளில் உள்ள உப்பு, தாமிரம் மற்றும் தங்க சுரங்கங்களே இந்த நகரம் இருந்ததற்கான சான்றாகவும் சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...