Nov 3, 2012

செய்திகளைக் காவும் பத்திரிகைகளே நோயையும் காவுகின்றனவாம் - நிபுணர்கள் எச்சரிக்கை!

செய்திகளைக் காவும் பத்திரிகைகளே நோயையும் காவுகின்றனவாம் - நிபுணர்கள் எச்சரிக்கை!
[Sunday, 2012-11-04
News Service மருத்துவமனைகளில், வரவேற்பறைகளில் கிடக்கும், பழைய பத்திரிகைகளின் மூலம் தொற்று நோய் பரவும், என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.தனியார் மருத்துவமனைகளில், டாக்டரை பார்க்க, காத்திருக்கும் நேரத்தை சமாளிக்க, வரவேற்பு அறைகளில், பழைய பத்திரிகைகளை வைத்திருப்பார்கள். நோயாளிகள் பலர் இதை தொட்டு, படிப்பதால், பலருக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளதாக பிரிட்டனின், தேசிய சுகாதார மைய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
  
பிரிட்டனின், டோர்செட் மாவட்டத்தில், லைம்ரெஜிஸ் பகுதியில் உள்ள, பல் மருத்துவமனையில் 2004ம் ஆண்டு வெளிவந்த பத்திரிகைகள்,
நோயாளிகள் படிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற பழைய பத்திரிகைகளின் மூலம் பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்றவை பரவக்கூடும். எனவே, ஒரு வாரத்திற்குட்பட்ட பத்திரிகைகளை மட்டும் வரவேற்பறையில் வைக்கும் படி, பிரிட்டன் சுகாதார மையம், இந்த மருத்துவமனைக்கு "நோட்டீஸ்' அனுப்பியுள்ளது."பழைய பத்திரிகைகள் மூலம் நோய் தொற்றும் என்பதை நான் நம்பவில்லை' என, 30 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...