எலும்புகள் பலமா இருக்க உண்ண வேண்டிய உணவுகள்..
|
எளிதில் எலும்பு முறிவு ஏற்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தற்போது இளம்
வயதினரையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு
மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு திறன்
குறைவு நோய் ஏற்படுவது வழக்கம். இந்த நோயின் காரணமாக எலும்புகள் போதிய
சக்தியில்லாமல் எளிதில் உடையும் நிலையை அடைகின்றன.
|
இளைய தலைமுறையினர் பாதிப்பு
சுண்ணாம்பு சத்து, வைட்டமின் டி சத்து குறைவு போன்றவற்றால் இந்த நோய் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு காணப்பட்ட இந்த நோய் தற்போது இளம் வயதினருக்கும் காணப்படுகிறது. பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, போதிய அளவு உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் இளைஞர்களை தாக்கி வருகிறது. கால்சியம் சத்து அதிகம் உள்ள பால், கீரைகள் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பதும் இந்த நோய் தாக்குவதற்கு காரணமாக அமைகிறது. மேலும் விட்டமின் டி குறைபாடினாலும் முதுகெலும்பை தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய், பின்னர் கை கால் எலும்புகளையும் பாதிக்க செய்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே சத்தான உணவுகளை சாப்பிட்டால் இந்த நோய் பாதிப்பிலிருந்து தப்பலாம் என்று கூறும் நிபுணர்கள் அதற்கான உணவுகளை பரிந்துரைத்துள்ளனர். பால் மற்றும் பால் பொருட்கள் குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்களை சாப்பிடவேண்டும். சீஸ், யோகர்டு, பன்னீர், ஸ்கிம்டு மில்க் பவுடர் போன்றவற்றில் கால்சியம் காணப்படுகிறது. அவற்றை சாப்பிடலாம். இதனால் எலும்புகள் பலமடையும். பாதாம், பிஸ்தா, போன்ற கொட்டைகளில் உடலுக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன. கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவைகள் காணப்படுகின்றன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பாதிப்படையாமல் தப்பிக்கலாம். சத்தான காய்கறிகள், பழங்கள் புருக்கோலி, முட்டைக்கோஸ், காலிப்ளவர், பீட்ரூட், ஓக்ரா போன்ற காய்கறிகளை தினசரி சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம். ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரீஸ், வாழைப்பழம், ஆப்பில் போன்றவை எலும்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும். ராகி 100 கிராம் ராகியில் 330 மில்லிகிராம் முதல் 350 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. எனவே ராகி சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். பேரிச்சை நல்லது பேரிச்சம்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ் உள்ளது. அதேபோல் தாமிரச்சத்துக்களும், மங்கனீசியமும் காணப்படுகின்றன. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. வைட்டமின் டி சத்து எலும்புகளின் வளர்ச்சிக்கும், சருமத்திற்கும் வைட்டமின் டி அவசியம். எனவே வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். சூரிய ஒளியில் விட்டமின் டி உள்ளது. எனவே உடலில் சூரிய ஒளி படுமாறு நிற்கலாம். பருப்பில் இருக்கும் சத்து கருப்பு உளுந்து கால்சியம் சத்து நிறைந்தது. அதேபோல் சோயபீன், கொள்ளு போன்றவைகளில் கால்சியம் சத்து காணப்படுகின்றன. அதேபோல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன் உணவுகளை உட்கொள்ளலாம். உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்பு உடைதல் நோய்களில் இருந்து தப்பிக்கலாம். |
யுஎஸ்பி3 பற்றிய சில முக்கிய தகவல்கள்.
கணணி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு பெருந்துணையாக இருப்பது யு.எஸ்.பி சாதனங்களே.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
யு.எஸ்.பி.3 அதன் முன்னோடியான யு.எஸ்.பி.2க் காட்டிலும் பத்து மடங்கு வேகமாக இயங்குகிறது. இந்த வேக அதிகரிப்பு சில சாதனங்களில் நாம் உணர முடியாத அளவிற்கு படு வேகமாக உள்ளது. போர்ட்டபிள் மற்றும் வன்தட்டுகளின் செயல்பாட்டில் இவற்றை நாம் உணரலாம்.
மிகப் பெரிய அளவிலான மியூசிக் மற்றும் வீடியோ கோப்புக்களை ஒரு சாதனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிப் பார்க்கையில் இந்த இரண்டு தொழில்நுட்ப இயக்கத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டினை உணரலாம். யு.எஸ்.பி. 3 ஒரு நொடியில் 5 கிகா பிட்ஸ் தகவல்களை மாற்றுகிறது.
யு.எஸ்.பி.2 ஒரு நொடியில் 480 மெகா பிட்ஸ் தகவல்களையே கடத்துகிறது. இதனால் யு.எஸ்.பி.2 மூலம் 15 நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றத்தினை யு.எஸ்.பி.3 மூலம் ஒரே நிமிடத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த இரு வகை சாதனங்களில் பயன்படுத்தப்படும் கேபிள் வயரிங் அமைப்பு வேறுபட்டிருந்தாலும் யு.எஸ்.பி சாதனத்தை மற்ற சாதனங்களுடன் இணைக்கும் வழி இரண்டிலும் ஒரே மாதிரியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் செயல்பாட்டிலும், வடிவமைப்பிலும் இரண்டையும் ஒன்றின் இடத்தில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
கணணி செயல்பாட்டினைப் பொறுத்த வரை இரு சாதனங்களுக் கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகையில் ஒன்று மட்டும் வேகமாகச் செயலாற்றினால் போதாது. இரண்டு சாதனங்களும் ஒன்றின் வேகத்திற்கு இன்னொன்றும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
எடுத்துக்காட்டாக பழைய கணணியில் யு.எஸ்.பி. 3 சாதனம் இணைக்கப்படுகையில் கணணியின் செயல் திறன் மெதுவாக இருந்தால் யு.எஸ்.பி.2 வேகத்திலேயே புதிய யு.எஸ்.பி.3 இயங்கும்.
இந்த இரண்டு தொழில்நுட்பங்களுக்கு இடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு தகவல் செல்லும் பாதை தான். யு.எஸ்.பி.3 தகவலை அனுப்பும் அதே நேரத்தில் தகவலை பெறவும் முடியும். ஆனால் யு.எஸ்.பி.2 ஏதேனும் ஒரு திசையில் தான் ஒரு நேரத்தில் தகவலை அனுப்ப முடியும்.
இதனை ஆங்கிலத்தில் polling mechanismUSB2 என்றும் asynchronous mechanism USB3 என்றும் கூறுவார்கள். இந்த முன்னேறிய தொழில்நுட்பம் வன்தட்டுகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொள்கையில் மிக உதவியாக இருக்கும்.
யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் கூடுதலான எண்ணிக்கையில் யு.எஸ்.பி சாதனங்களை இயக்கும் திறன் கொண்டது. இதனால் அதிக எண்ணிக்கையில் யு.எஸ்.பி. போர்ட் கொண்ட யு.எஸ்.பி. ஹப்களைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment