Nov 3, 2012

ஜப்பான் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சீன கப்பல்கள்




[ சனிக்கிழமை, 03 நவம்பர் 2012,
ஜப்பான் கடல் எல்லைக்குள் சீனாவின் கப்பல்கள் மீண்டும் அத்துமீறி நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள சென்காகு தீவுகளுக்கு ஜப்பானும், சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில் சென்காகு தீவு கடல் பகுதியில் சீனாவின் கடலோர கண்காணிப்பு படைக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் நேற்று அத்துமீறி நுழைந்தன. அவர்கள் ஜப்பான் கடற்படை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர்.
ஆனால் தங்கள் கடல் பகுதி எல்லையில் தான் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதாக சீனா கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே கப்பல்கள் கடந்த மாதம் 30ஆம் திகதி அத்துமீறி நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...