Aug 31, 2012

முடியின் ஆரோக்கியத்தை வைத்து மன உளைச்சல் மற்றும் மாரடைப்புக்கான சாத்தியங்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்

இதய நோய் பாதிப்பு உள்ள அனைவரின் தலைமுடியிலும் கார்டிசால் என்ற ஸ்டீராய்டு ஹார்மோனின் அளவு அதிகம் இருப்பது பரிசோதனைகள் மூலம் தெரியவந்தது

தலை முடிக்கும் உடல் ஆரோக்கியத்துக்குமான தொடர்பு பற்றி கனடாவின் வெஸ்டர்ன் ஆன்டாரியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கிடியான் கொரியன், ஸ்டான் வான் யுன் தலைமையில் சமீபத்தில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.இதய நோயால் பாதிக்கப்பட்டு இஸ்ரேலின் மேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 56 பேரின் தலைமுடியை வைத்து ஆராய்ச்சி நடந்தது.
இதய பாதிப்பு இல்லாதவர்களின் முடியும் ஆய்வு செய்யப்பட்டது

கடல் நீரை குடிநீராக மாற்றும் அதிசய நதி!!



நமது அன்றாட வாழ்வில் நாம் தினம்தோறும் பயன்படுத்தும் தண்ணீரையே நம்மால் சுத்தமாக பார்த்துக்கொள்வதற்கு பல போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறோம் . ஆனால் ஒரு இயற்கையான நிகழ்வு கடல்நீரையே சுத்தம் செய்கிறது என்றால் சற்று வியப்பாககத்தான் உள்ளது .நம் அனைவருக்கும் இதுநாள் வரை கடல் நீர் என்றாலே உப்பு நீர்தான் என்று மட்டும்தான் அறிந்து இருக்கிறோம் .
ஆனால் அந்த கடலிலும் நாம் தினம்தோரும் அருந்துவதுபோல் நீர்

உலகம் உங்கள் கையில்



பல்கலை. லைசென்ஸ் ரத்து இந்திய மாணவர்கள் தவிப்பு

லண்டன்: லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தில், இந்தியர்கள் மற்றும் ஐரோப்பியா அல்லாத வேறு நாட்டு மாணவர்களை சேர்த்துக் கொள்ளுவதற்கான லைசென்சை அந்நாட்டு குடியேற்றத்துறை ரத்து செய்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு செப்டம்பர் முதல் தொடங்குகிறது. இதனால் இந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கும் விருப்பத்தில் இருந்து ஏராளமான இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்கள்

லண்டன் பல்கலைக் கழக அ‌ங்‌கீகார‌ம் ரத்தா‌ல் 2000 இந்திய மாணவர்கள் ‌நிலை கே‌ள்‌வி‌கு‌றி

லண்டன் பல்கலைக் கழக அ‌ங்‌கீகார‌ம் ரத்தா‌ல் 2000 இந்திய மாணவர்கள் ‌நிலை கே‌ள்‌வி‌கு‌றி

விதிமுறைகளை பின்பற்றாத லண்டனில் உள்ள மெட்ரோபாலிடன் பல்கலை‌‌க்கழகத்தின் அ‌ங்‌கீகா‌ர‌த்தை இ‌ங்‌கில‌ா‌ந்து அரசு ரத்து செய்து‌ள்ளத‌ா‌‌ல் இ‌ங்கு படி‌க்கு‌ம் 2 ஆ‌யிர‌ம் இ‌ந்‌திய மாணவ‌ர்க‌ள் உ‌ள்பட பல நாட்டு மாணவர்களின் நிலை கேள்விகுறியாகியுள்ளது.
எனினும் மாணவர்களுக்கு ம‌ற்ற பல்கலை‌க்கழகங்களில் இடம் அளிக்க இ‌ங்‌கிலா‌ந்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மற்ற பல்கலை கழகங்களோ தேர்வு வைத்து உரிய மதிப்பீட்டின் படியே மாணவர்களை சேர்க்க முடியும் என அறிவித்துள்ளது.
ஆனால் இந்த மெட்ரோபாலிடன் பல்கலை‌க்கழகம் இதிலும் விளையாடியுள்ளது. மாணவர்களின் மொழி மற்றும் சுய திறனை பரிசோதிக்காமல் மாணவர்கள் அனைவரையும் பலகலைக்கழகத்தில் சேர்த்துள்ளது.
பிற பலகலை‌க்கழகத்தின் நுழைவு தேர்வில் இந்த மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் மாணவர்களுக்கான விசாவை இ‌ங்‌கிலா‌ந்து அரசு தானாகவே ‌ர‌த்து செ‌ய்து ‌விடு‌ம். இதனா‌ல் மாணவர்கள் தாயக‌ம் ‌திரு‌ம்பு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம்.
மெட்ரோபாலிடன் பலகலைக்கழகத்தில் படிக்கும் 2000 இந்திய மாணவர்களில் பெரும்பாலும் சென்னை, டெல்லியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிட‌‌த்தக்கது.

4 லட்சம் சதுர மைல் பரப்பில் கூக் தீவில் உலகின் மிகப்பெரிய கடல் பூங்கா


4 லட்சம் சதுர மைல் பரப்பில் கூக் தீவில் உலகின் மிகப்பெரிய கடல் பூங்கா

பசிபிக் கடல் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா அருகே கூக் தீவுகள் உள்ளது. இங்கு உலகிலேயே மிகப்பெரிய கடல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இது 4 லட்சத்து 11 ஆயிரம் சதுர மைல் பரப்பளவு கொண்டது.

இதன் திறப்பு விழாவில் பங்கேற்ற அந்நாட்டு பிரதமர் ஹென்றி புனா பேசும் போது, இந்த கடல் பூங்கா உருவாக்கும் பணியில் 11 ஆயிரம் பேர் ஈடுபட்டதாக கூறினார். இந்த பூங்கா பிரான்சைவிட 2 மடங்கு பெரியதாகவும், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைவிட பெரியதாகவும் உள்ளது.

பசிபிக் கடல் பிராந்தியத்தில் சுற்று சூழலை பாதுகாக்கவும் சுற்றுலாவை மேம்படுத்தவும் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியட் கில்லார்ட், நியூசிலாந்து பிரதமர் ஜான்கே உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.9 பதிவு

மத்திய பிலிப்பைன்சில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் தீவுகள் அருகே கடலுக்கு அடியில், 33 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது. இதனால் வீடுகள் குலுங்கின. பலர் வீடுகளை விட்டு வெளியேறினர்.

கேபு, லித்தே மற்றும் புக்கிட்னான் ஆகிய மாகாணங்களில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், ஜப்பான், பெலாவு, பப்புவா நியூ கினியா போன்ற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் குறித்து உடனடியாக தெரிய வில்லை.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சாலமன் தீவு, ரஷ்யா, நவ்ரு உள்ளிட்ட பகுதிகளிலும் இருக்கும் என தெரிகிறது.

Aug 30, 2012

சகலரும் அறிந்திருக்க வேண்டிய 100 மருத்துவக் குறிப்புகள்- இப்பவே நோட் பண்ணுங்க!

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி

Aug 29, 2012

சான்ட்ரோ கார் உற்பத்தியை நிறுத்த ஹூண்டாய் முடிவு

விற்பனை சரிந்து வருவதால் தனது வெற்றிகரமான மாடலான சான்ட்ரோ கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்திவிடுவதற்கு ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாயின் முதல் கார் மாடலான சான்ட்ரோ கடந்த 1998ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் குறுகிய காலத்தில் மார்க்கெட்டில் பெரிய வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து, 2003ஆம் ஆண்டு சான்ட்ரோ ஸிங் மேம்படுத்தப்பட்ட மாடலை ஹூண்டாய் அறிமுகப்படுத்தியது. சான்ட்ரோவின் வெற்றி

அட்டகாசமான விலையில் நோக்கியா ஆஷா மொபைல்கள்


நோக்கியா ஆஷா வரிசை மொபைல்களில் 202 மற்றும் 302 என்ற இந்த மொபைல்களின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. நோக்கியாவின் ஆஷா வரிசை மொபைல்கள் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தம் பெற்றது. அந்த வகையில் இங்கு இரண்டு ஆஷா மொபைல்களின் தொழில் நுட்ப விவரங்களையும், அதன் விலை பட்டியல் பற்றிய விவரங்களையும் பார்க்கலாம். 2.4 இஞ்ச் திரை கொண்ட ஆஷா- 202 மொபைலின் திரையின் மூலம் சிறந்த தகவல்களை தெளிவாக பார்க்கலாம்.

புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை அறிமுகப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டம்


அதிக சக்தி கொண்ட புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கேடிஎம் டியூக் 200 பைக் விற்பனையில் நல்ல முன்னேற்றம் கணடு வருகிறது. மாதத்திற்கு 1000 பைக்குகள் விற்பனையாகிறது. இதனால், உற்சாகமடைந்துள்ள பஜாஜ் ஆட்டோ

கூகுளின் புதிய டேப்லட் அறிமுகம்




உலகப் புகழ் பெற்ற கூகுள் இணையதள நிறுவனமானது ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான் நிறுவனங்களுக்கு போட்டியாக தனது முதல் டேப்லட்டை அறிமுகம் செய்துள்ளது. சான்ஃப்ராசிஸ்கோவில் நேற்று நடைபெற்ற கூகுள் டெவலப்பர் மாநாட்டில் கூகுள் நிறுவனம் புதிய வகை டேப்லெட்டையும், ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பான ஜெல்லிபீன் என்னும் புதிய மென்பொருளையும் அறிமுகப்படுத்தி உள்ளது. நெக்சஸ் 7 என பெயரிடப்பட்டுள்ள இந்த டேப்லட், ஆசஸ் எனப்படும் வன்பொருள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...