உலகம் உங்கள் கையில்
பல்கலை. லைசென்ஸ் ரத்து இந்திய மாணவர்கள் தவிப்பு
லண்டன்: லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தில், இந்தியர்கள் மற்றும் ஐரோப்பியா அல்லாத வேறு நாட்டு மாணவர்களை சேர்த்துக் கொள்ளுவதற்கான லைசென்சை அந்நாட்டு குடியேற்றத்துறை ரத்து செய்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு செப்டம்பர் முதல் தொடங்குகிறது. இதனால் இந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கும் விருப்பத்தில் இருந்து ஏராளமான இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் உடனடியாக வேறு பல்கலைக்கழகத்தில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகம், வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக் கொள்வது தொடர்பான நடைமுறைகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பல்கலைக்கழகத்தில் 2,000 வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் வேறு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான நடவடிக்கைகளுக்கு உதவுதற்காக அரசு சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment