மத்திய பிலிப்பைன்சில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் தீவுகள் அருகே கடலுக்கு அடியில், 33 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது. இதனால் வீடுகள் குலுங்கின. பலர் வீடுகளை விட்டு வெளியேறினர்.
கேபு, லித்தே மற்றும் புக்கிட்னான் ஆகிய மாகாணங்களில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், ஜப்பான், பெலாவு, பப்புவா நியூ கினியா போன்ற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் குறித்து உடனடியாக தெரிய வில்லை.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சாலமன் தீவு, ரஷ்யா, நவ்ரு உள்ளிட்ட பகுதிகளிலும் இருக்கும் என தெரிகிறது.
No comments:
Post a Comment