பசிபிக் கடல் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா அருகே கூக் தீவுகள் உள்ளது. இங்கு உலகிலேயே மிகப்பெரிய கடல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இது 4 லட்சத்து 11 ஆயிரம் சதுர மைல் பரப்பளவு கொண்டது.
இதன் திறப்பு விழாவில் பங்கேற்ற அந்நாட்டு பிரதமர் ஹென்றி புனா பேசும் போது, இந்த கடல் பூங்கா உருவாக்கும் பணியில் 11 ஆயிரம் பேர் ஈடுபட்டதாக கூறினார். இந்த பூங்கா பிரான்சைவிட 2 மடங்கு பெரியதாகவும், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைவிட பெரியதாகவும் உள்ளது.
பசிபிக் கடல் பிராந்தியத்தில் சுற்று சூழலை பாதுகாக்கவும் சுற்றுலாவை மேம்படுத்தவும் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியட் கில்லார்ட், நியூசிலாந்து பிரதமர் ஜான்கே உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment