நியூயார்க் :அமெரிக்காவை உலுக்கிய, "சாண்டி' புயல் காரணமாக, பலத்த மழை
பெய்ததால், 1,000 கி.மீ., தூரம் கொண்ட சுரங்க ரயில் பாதைகளில் வெள்ளம்
சூழ்ந்துள்ளது. போக்குவரத்து சீராக, 10 நாட்களாகும், என
அறிவிக்கப்பட்டுள்ளது. கரிபியன் கடலில், கடந்த வாரம் தோன்றிய, "சாண்டி'
புயல், அமெரிக்காவின், நியூயார்க், வாஷிங்டன், நியூஜெர்சி உள்ளிட்ட, 15
மாகாணங்களை தாக்கியது. புயலுக்கு இதுவரை, 50 பேர், பலியானர். இந்தியர்கள்
அதிகம் வசிக்கும் நியூஜெர்சியும், நியூயார்க்கும் இந்த புயலில் அதிகமாக
பாதிக்கப்பட்டன. நியூயார்க் பங்கு சந்தை இரண்டு நாட்கள் மூடப்பட்டது. 13
ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பலத்த காற்றினால், மின் இணைப்புகள்
துண்டிக்கப்பட்டு, பெரும்பாலான நகரங்கள், இருளில் மூழ்கின. 75 லட்சம் பேர்,
மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டனர்.
மூன்று அணு நிலையங்கள் மூடல் :
நியூஜெர்சியில் உள்ள, "ஆயிஸ்டர் க்ரீக்' அணுசக்தி நிலையத்தில்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நியூஜெர்சியில், டெலாவர்
நதிக்கருகே உள்ள, இரண்டு
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா