Aug 31, 2012

நடுவானத்தில் பிறந்த குழந்தைக்கு எமிரேட்ஸ் என்று பெயர் வைத்த பெற்றோர் !



கடந்த 22-ம் தேதி, துபாயில் இருந்து மனிலா (பிலிபீன்ஸ்) சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தடம் இலக்கம் EK22 நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இதில் பயணியாக சென்றுகொண்டிருந்த பிலிப்பீனோ பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அதையடுத்து விமானம் திசை திருப்பப்பட்டு, வியட்நாமில் எமர்ஜென்சி லேன்டிங் செய்தது.

விமானத்தில் பயணிகளாக இருந்த இரு நர்சுகளும், நான்கு விமானப் பணிப்பெண்களும், பிரசவத்துக்கு உதவினர்.

உண்மையில் இந்த குழந்தை குறைப் பிரசவமாக 27 வாரங்களில் பிறந்தது. பிறந்த குழந்தையை சூடாக வைத்திருப்பதற்காக விமானத்தின் முதல் வகுப்பு சீட்களில் உள்ள ரீடிங் லைட்டுகளை (LED reading lamps) போர்வையால் போர்த்தி அந்த வெப்பத்தில், விமானம் தரையிறங்கும்வரை விமானப் பணிப்பெண்கள் வைத்திருந்தனர்.

27 வாரங்களில் குறைந்த எடையில் பிறந்த காரணத்தால், குழந்தை இன்னமும் வியட்நாமில் உள்ள மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது.


No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...