Sep 5, 2012

23 இந்திய மாலுமிகளுடன் கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பல் மீட்பு: நைஜீரிய கடற்படை அதிரடி

23 இந்திய மாலுமிகளுடன் கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பல் மீட்பு: நைஜீரிய கடற்படை அதிரடி

லாகோஸ், செப். 5-
 
நைஜீரியாவின் வணிக நகரமான லாகோஸ் கடலில் சிங்கப்பூர் நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.டி. அபு தாபி ஸ்டார் என்ற எண்ணெய்க் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினர். நேற்று இரவு அந்த கப்பலில் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த ஊழியர்கள் சிலரைத் தாக்கி, கப்பலை கடலுக்குள் செலுத்தும்படி மிரட்டியுள்ளனர். இந்தக் கப்பலில் 23 இந்திய மாலுமிகள் இருந்தனர்.
 
கப்பலை கடத்திய கொள்ளையர்கள் தங்களது கோரிக்கை என்ன என்பதை உடனடியாக தெரிவிக்கவில்லை. தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் கப்பல் நிறுவன அதிகாரிகளிடையே பதட்டம் ஏற்பட்டது.
 
இதையடுத்து நைஜீரிய கடற்படை கப்பல் விரைந்து சென்று, கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த கப்பலை சுற்றி வளைத்தது. இதையடுத்து கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து இந்திய மாலுமிகள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுடன் கப்பல் பத்திரமாக மீட்கப்பட்டது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...