Sep 5, 2012

ஒபாமாவுக்கு நன்கொடையை அள்ளித் தரும் அமெரிக்க இந்தியர்கள்- ரோம்னிக்கு கொஞ்சமே!


 Indian Americans Open Up Wallets Obama
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஒபாமாவுக்குத்தான் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் அதிகளவு நன்கொடை கொடுத்து வருகின்றனராம். அவரை எதிர்த்து போட்டியிடும் மிட் ரோம்னிக்கு அவ்வளவாக இந்தியர்களின் நன்கொடை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும்கூட 2008-ம் ஆண்டு ஒபாமாவுக்கு இந்தியர்கள் அளித்த நன்கொடையைவிட குறைவாகத்தான் தற்போது கிடைத்திருக்கிறது.
ரோம்னி தரப்பில் ப்ளோரிடாவைச் சேர்ந்த இந்தியரான டாக்டர் அக்ஷாய் தேசாய்தான் அதிகளவு நன்கொடையை திரட்டிக் கொடுத்திருக்கிறார். 1 மில்லியன் டாலர் வரையில் தேசாய் நன்கொடை திரட்டியிருக்கிறார்.
ரோம்னியின் நன்கொடை திரட்டும் குழுவில் இருக்கும் ஒரே இந்தியரும் கூட தேசாய்தான்.
ஒபாமா தரப்பில் ராஜீவ் பெர்னாண்டோ, ஷெபாலி ரஜ்தான், ரேஷ்மா செளஜினி, ராஜ் கோயல், கமில்ஹாசன், அஜிதா ராஸி ஆகியோர் ஒபாமா தரப்பில் இருக்கின்றனர். ஒபாமாவின் பிரச்சாரத்துக்காக டாக்டர் தீபக் சோப்ரா 1 லட்சம் முதல் 2 லட்சம் டாலர் வரை நன்கொடை திரட்டியிருக்கிறார். இவருடன் கவிதா மற்றும் கிரிஷ் ரெட்டி ஆகியோரும் இணைந்திருக்கின்றனர். இதேபோல் மனீஷ் கொயல், அனு தக்கால், திதி சலுஜா, அமி கே சிங், ஷெல்லி கபூர் காலின்ஸ் ஆகியோரும் ஒபாமாவுக்கு நன்கொடை திரட்டுவதில் முதன்மையானவர்கள்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...