Sep 5, 2012

ஆஸ்திரேலியாவில் இந்திய உணவு விடுதிக்கு ரூ.55 லட்சம் அபராதம்: சமையல் அறையில் எலி செத்து கிடந்தது


ஆஸ்திரேலியாவில் இந்திய உணவு விடுதிக்கு ரூ.55 லட்சம் அபராதம்: சமையல் அறையில் எலி செத்து கிடந்தது  

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இந்திய உணவு விடுதி ஒன்று உள்ளது. அங்கு சுத்தமான உணவு வழங்கப்படவில்லை என புகார் வந்தது. அதை தொடர்ந்து அங்கு சுகாதார துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு தரமான சுத்தமான உணவு இல்லை உணவு பண்டங்களில் கரப்பான் பூச்சிகள் மொய்க்கின்றன என வாடிக்கையாளர்கள் புகார் செய்தனர். உடனே அந்த உணவு விடுதியை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அங்கு சமையல் அறையிலும், அதை சுற்றியுள்ள இடங்களிலும் எலி செத்து கிடந்தது. கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை அங்குமிங்கும் சுற்றி திரிந்தன. எனவே, அந்த ஓட்டல் மீது சுகாதார அதிகாரிகள் 13 புகார்கள் பதிவு செய்தனர்.

இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை பெண் நீதிபதி கெய்ல் மாட்க்விக் விசாரித்தார். ஒவ்வொரு புகாருக்கும் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் வீதம் 13 புகாருக்கு ரூ.55 லட்சம் அபராதம் விதித்தார்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...