வாஷிங்டன், செப். 5-
சூரிய
குடும்பத்தில் உள்ள வியாழன், சனி ஆகிய கிரகங்களில் ஆய்வு மேற்கொள்ள
அமெரிக்காவின் நாசா மையம் வாயேஜர்-1, வாயேஜர்-2 என்ற இரண்டு விண்கலங்களை
அனுப்பியது. அவற்றை எட்ஸ்டோன் என்ற 76 வயது விஞ்ஞானி மிகவும் கஷ்டப்பட்டு
உருவாக்கினார். அவை கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்து
அனுப்பப்பட்டது. அதாவது கடந்த 1977-ம் ஆண்டில் ராக்கெட் மூலம் விண்ணில்
ஏவப்பட்டது.
அதில் வாயேஜர்-2 விண்கலம் இரண்டு
வாரத்துக்கு முன்பு சூரிய குடும்பத்துக்குள் சென்றடைந்தது. தற்போது அது
சூரியனில் இருந்து 1440 கோடி கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நிலையில்
வாயேஜர்-1 விண்கலம் சூரிய குடும்பத்தை சென்றடையும் நிலையில் உள்ளது. அது
சூரியனில் இருந்து 1770 கோடி கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இரண்டு
விண்கலங்களும் வியாழன் மற்றும் சனி கிரகத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளன.
அங்குள்ள எரிமலைகள், கடல் மற்றும் பனி மண்டலங்கள், டீ, தேன், மழை, சனி
கிரகத்தின் டைடன் துணை கோள் போன்றவைகள் குறித்து பல தகவல்களை
அனுப்பியுள்ளது.
No comments:
Post a Comment