Sep 2, 2012

செவ்வாய் கிரகத்திற்கு விஞ்ஞானிகளை அனுப்ப பிக்பிரதர் நிகழ்ச்சி மூலம் நிதிதிரட்டும் நெதர்லாந்து.


செவ்வாய் கிரக ஆய்வுப் பணியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் மேற்கொண்டுள்ளது. 7 ஆண்டு ஆய்வுக்கு பிறகு அங்கு மனித இனம் வாழ முடியுமா? என்பதை ஆராய கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.

அங்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள முடியுமா? என்பது குறித்து அடுத்த ஆண்டில் ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஆனால் இன்னும் 10 ஆண்டுகளில் அதாவது 2023-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு 4 விஞ்ஞானிகளை அனுப்ப நெதர்லாந்து திட்டமிட்டுள்ளது. இதற்கு மார்ஸ்-1 என்று பெயரிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து கடந்த 1999-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற நெதர்லாந்து இயற்பியல் விஞ்ஞானி ஜெராட் ஹாப்ட் கூறும் போது, இந்த முயற்சி வெற்றி பெறும். இந்த திட்டம் உண்மையிலேயே வெற்றிகரமாக முடியும் என்று கூறியுள்ளார்.

மெக்கானிக்கல் என்ஜினீயர் பாஸ்லேண்ட்ராப் (35) கூறும்போது,

நெதர்லாந்தின் இந்த திட்டத்துக்கு ரூ. 35 ஆயிரம் கோடி செலவாகும். இது கியூரியாசிட்டி விண்கலம் திட்டத்தைவிட 2 மடங்கு அதிகம் என தெரிவித்தார். அதற்கான நிதியை பிக்பிரதர் டி.வி. நிகழ்ச்சி மூலம் திரட்ட முடியும்.

ஏனெனில் செவ்வாய் கிரகத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப நெதர்லாந்தின் பிக்பிரதர் நிகழ்ச்சி டி.வி. தயாரிப்பாளர் பால்ரோமர் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

செவ்வாய் கிரகத்துக்கு விஞ்ஞானிகளை அனுப்புவதன் மூலம் நாசா மையத்தின் சாதனையை நெதர்லாந்து முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...