அமெரிக்காவைச் சேர்ந்த அலாஸ்கா மாகாணம் கனடா நாட்டில் உள்ளது. இங்கு பல தீவுகள் உள்ளன. இந்த நிலையில் இங்குள்ள அலேடியன் தீவுகளில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்து குலுங்கின.
அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்த படி எழுந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்து பீதி அடைந்தனர். பின்னர் குழந்தைகளுடன் குடும்பத்தை விட்டு வெளியேறி ரோடுகள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையே 6.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. பூமிக்கு அடியில் 30 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவானதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரம், உயிர் சேதம் போன்றவை வெளியிடப்படவில்லை.
No comments:
Post a Comment