Sep 27, 2012

பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்துங்கள்: அமெரிக்காவுக்கு, விக்கிலீக்ஸ் அதிபர் அசாங்கே வேண்டுகோள்

பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்துங்கள்: அமெரிக்காவுக்கு, விக்கிலீக்ஸ் அதிபர் அசாங்கே வேண்டுகோள்நியூயார்க்,செப்.28-

அமெரிக்கா தூதரகங்கள் மற்றும் ராணுவம் இடையே நடைபெற்ற ஆயிரக்கணக்கான ரகசிய உரையாடல் தகவல்களை சேகரித்து அதனை தனது விக்கிலீக் இணையதளத்தின் மூலம் அம்பலப்படுத்தியவர் அசாங்கே. இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியது. இதனால் அவர் இங்கிலாந்தில் தங்கி இருந்தார்.

இதற்கிடையில் அவர் மீது சுவீடன் பெண் ஒருவர் தன்னை கற்பழித்ததாக புகார் தெரிவித்தார். இதில் அவரை ஆஜர்படுத்த சுவீடன் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை அடுத்து அசாங்கேவை கைது செய்து நாடு கடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டார்கள். உடனே அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி லண்டனில் உள்ள ஈகுவேடார் தூதரகத்திற்கு சென்று தஞ்சம் அடைந்தார். இவருக்கு ஈகுவேடார் தவிர மேலும் பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஐ.நா.சபைக்கு செயற்கைகோள் மூலம் அவர் அளித்த பேட்டியில் அமெரிக்காவுக்கு வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:

நான் ஈகுவேடார் தூதரகத்தில் கடந்த 100 நாட்களாக சுதந்திர மனிதனாக இருக்கிறேன். மனதில் தோன்றியதை சுதந்திரமாக தெரிவிக்கிறேன். ரகசியங்களின் சாம்ராஜ்ஜியமாக விளங்குவதை அமெரிக்கா விரும்புகிறது. ஜனாதிபதி ஒபாமா ஐ.நா.சபையில் பேசிய உரை அரசியல் பிரசாரமாகவே இருந்தது. எங்கள் (விக்கிலீக்) மீதான விசாரணையை அமெரிக்கா தளர்த்த வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். ஜனாதிபதி ஒபாமா பேசுவதோடு நிறுத்தி கொள்ளாமல் அதை செயல்படுத்த முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...