Sep 27, 2012

இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் கேரளாவில் அமைகிறது

இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் கேரளாவில் அமைகிறதுஇந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் கேரளாவில் அமைகிறது
திருவனந்தபுரம்,செப்.27-
 
இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டத்தின் ஆரன்முளா பகுதியில் அமைய உள்ளது. தேசிய விமான நிலைய ஆணையத்தின் அனுமதி பெற்றுள்ள இந்த விமான நிலையத்திற்கு கே.ஜி.எஸ். சர்வதேச விமான நிலையம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
இதுபற்றி பேசிய கே.ஜி.எஸ். நிறுவன இயக்குனர் நந்தகுமார், ‘தேசிய விமான நிலைய ஆணையத்தின் குழு ஒன்று விமான நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு அதற்கான அனைத்து அனுமதிகளையும் வழங்கியுள்ளது. ரூ.20000 கோடி செலவில் உருவாகும் இந்த விமான நிலையத்தால் ஆரன்முளா பகுதி, பத்தனம்திட்டை மாவட்டம் மட்டுமின்றி கேரளா முழுவதும் வளர்ச்சி அடையும்’ என்றார்.
 
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அருகில் அமைய இருக்கும் இவ்விமான நிலையம், பயன்பாட்டிற்கு வந்தால் சபரிமலை செல்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். வழக்கம்போல் இவ்விவகாரத்திலும், விமான நிலையத்தை அமைக்கக் கூடாது என ஒரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாயின. எனினும் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் பற்றிய தகவல்கள் வெறும் வதந்திதான் என கே.ஜி.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...