பொன்னாங்கண்ணி
பொன் அங்கே காணீர் என்பது தான் பொன்னாங்கண்ணி என்ற பெயரில் ஒரு சாதாரண கீரையாக தெருவில் வைத்து விற்கப்படுகிறது.
இந்த கீரையை தினந்தோறும் உண்டு வாழ்வோருக்கு உடல் பொன்போல பளபளப்பாகும் என்பர். எதிர் அடுக்குகளில் சற்று நீண்ட சிறு இலைகளைக் கொண்ட தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி இனம் பொன்னாங்கண்ணி. வெள்ளை நிறப் பூக்கள்
இலைக் கோணங்களில் காணப்படும். செடி முழுவதும் மருத்துவக் குணம் கொண்டது.
புரதம், இரும்பு, சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் சீயும் நிறைந்த இந்தக் கீரை குளிர்ச்சி தரக் கூடியது. பத்தியக் கீரை இது. உடல் உஷ்ணத்தைத் தணித்து உடலுக்கு பலம் தரவல்ல இந்தக் கீரை சொறி சிரங்குகளை போக்கி மேனியின் அழகைக் கூட்டும். கண்கள் சம்பந்தமான நோய்கள் அனைத்தையும் போக்கி நல்ல பார்வையைத் தரவல்லது இது, மூல நோய், மண்ணீரல் பாதிப்புகள் போக்கும் தன்மை இதற்கு உண்டு.
பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி என்றும், நாட்டுப் பொன்னாங்கண்ணி எனவும் இரு வகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுவது .மருத்துவ குணம் குறைவு . பெச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல அருங் குணங்கள் கொண்டது. உடலுக்கு குறிச்சியை தரக்கூடியது. தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் பகலில் கூட நச்சத்திரம் காணலாம் என்பர் .கண்ணுக்கு அத்தனை நல்லது.
இதற்கு அகத்தியர் கீரை, பொன்னாங்காணி, சீமை பொன்னாங்கண்ணி என பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் காணப்படும் இது படர்பூண்டு வகையைச் சார்ந்தது.
Tamil : Ponnankanni
English : Alternanthera
Botanical Name : Alternanthera Sessilis (Amaran theceae)
பொன்னாங்கண்ணிக் கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.
தினமும் உணவில் கீரையை சேர்த்து வந்தால் நோயில்லா பெரு வாழ்வு வாழலாம் என்று ஆன்றோர்களும் சான்றோர்களும் கூறியுள்ளனர்.
இன்று நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம் கலந்திருப்பதால் அவை இரத்தத்தில் நேரடியாக கலந்துவிடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றது.
பொன்னாங்கண்ணிக் கிரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும்.
இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
குடலில் அலர்ஜி உண்டாகி அவை மூலத்தை தாக்கி மூலநோய் ஏற்படும். இதற்கு சிலர் அறுவை சிகிச்சை கூட செய்துகொள்வார்கள். இந்த நிலை மாற பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் சீரகம் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் படிப்படியாக குணமாகும். அப்போது புளி, காரத்தை தவிர்ப்பது நல்லது.
கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது - 20 கிராம், அருகம்புல் காய்ந்தது - 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது - 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.
பொன்னாங்கண்ணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயமும் மூளையும் புத்துணர்வாக்கும். மேனியை பளபளக்கச் செய்யும். நோய் காரணமாக பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும்.
அசைவம் தான் தேவை என்று இல்லை உடலை வலுப் படுத்த பசலையும் ,பொன்னாங்கண்ணிக் கீரையும் போதுமானது .
பொன்னாங்காணி என்பது பொன் ஆம் காண் நீ. இதைக் கண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாய் எனப் பொருள் பெறுகின்றது.
பொன்னாங்காணி இலைகளை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதிகாலையில் மென்று தின்று ஒரு டம்ளர் பால் குடித்து வர உடல்குளிர்ச்சி அடைந்து கண் நோய் குணமாகும். பார்வை தெளிவடையும்.
பொன்னாங்காணி இலையைக் கீரையாக உணவுடன் தொடர்ந்து உண்டு வர உடல் சூடு, மூலம் குணமாகும். கண் ஒளி பெறும்.
பொன்னாங்காணி இலைச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அத்துடன் அதிமதுரம், கோசுடம், செங்கழு நீர்க்கிழங்கு, கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை தலை முழுகிவர உட்காய்ச்சல், உடல்சூடு, கைகால் உடல் எரிச்சல், மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி குணமாகும்.
பொன்னாங்காணி வேர் ஒரு எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து அரைத்து எருமைப் பால் 2 படியில் கலக்கிக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்து எடுத்த வெண்ணெயை 3 நாள் காலையில் சாப்பிட்டு மோரையும் தாகத்துக்குக் குடித்து வர இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும்.
பொன்னாங்காணியை உப்பு இல்லாமல் வேக வைத்து வெண்ணெயிட்டு 40 நாளுண்ண கண்ணில் உண்டாகும் நோய் நீங்கும்.
இலையின் சாறு ஒரு லிட்டர், எலுமிச்சை பழச்சாறு 1/2 லிட்டர், பசு நெய் 1 கிலோ, ஆவின்பால் 1 லிட்டர் இவற்றை ஒன்றாகக் கலந்து 50 கிராம் அதிமதுரத்தைப் பால்விட்டு அரைத்துப் போட்டு பதமாக சிறு தீயில் காய்ச்சி மெழுகு பதத்தில் வடிகட்டி அத்துடன் சாதிக்காய் 5 கிராம் சாதிபத்திரி 5 கிராம், சீனா கற்கண்டு 5 கிராம் கோரோசணை 5 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தி அதில் 5 கிராம் அளவு 2 வேளை சாப்பிட்டுவர மூலச்சூடு வெப்ப நோய், கைகால் எரிச்சல், வாய் நாற்றம், வெள்ளை, வயிற்றெரிச்சல் நீங்கும்.
பொன்னாங்காணி சாறு 1 லிட்டர், கரிசலாங்கண்ணிச் சாறு 1 லிட்டர், நெல்லிக்காய்ச்சாறு 1 லிட்டர், நல்லெண்ணெய் 2 லிட்டர், பசுவின் பால் 1 லிட்டர் அதிமதுரத்தை 50 கிராம் எடுத்து பால்விட்டு அரைத்து சேர்த்து மெழுகுபதமாக சிறு தீயிலிட்டு பதமாகக் காய்ச்சி வடிகட்டி தேய்த்துவர 96 வகையான கண்நோய்கள், அழல் நோய் குணமாகும்.
நம் உடலில் உஷ்ணம் மட்டுப்பட்டு சீராக இருப்பதற்கு, பொன்னாங்கண்ணிக் கீரை மூலம் வீட்டு வைத்தியம் மேற்கொள்ளலாம்.
இந்தக் கீரை வயல் வரப்புகளிலும், கிணற்று மேடுகளிலும், குளம் குட்டைகளில் கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். பொன்னாங்கண்ணிக் கீரை கண் சம்பந்தப்பட்ட வாத காசம், கருவிழி நோய்கள், முதலியவற்றை குணமாக்க வல்லது. இக்கீரையை வெண்ணெய் சேர்த்து உண்ண கண் சம்பந்தப்பட்ட 96 வியாதிகள் நீங்கும். இக்கீரையை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கண் பார்வை மங்கல், திரைப் போட்டு மறைக்கும் கண் படலம் எல்லாம் விலகும்.
இனி கண்டால் விடாதீர்கள் ,பலன்கள் கிடைக்க தொடர்ந்து உபயோகிக்கவேண்டும் .
இரண்டு நாள் சாப்பிட்டு விட்டு பலன் இல்லை என்று பாராதீர்கள் .குறைந்தது ஒரு மண்டலம் எந்த மூலிகைக்கும் தேவை.
வரும் காலத்தில் பொன்னாங்காணில் தங்கம், வெற்றிலையில் பாதரசம் , கரிசாலையில் செம்பு என extract செய்யப்படலாம் .ஆனால் சித்தர்முறையில் இன்னும் அப்படி பிரித்து செய்யப்படுகிறது இது உண்மை

No comments:
Post a Comment