நடப்பாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு
பிரான்ûஸச் சேர்ந்த செர்ஜ் ஹரோச்சி(68), அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட்
வைன்லேண்ட்(68) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கணினித் துறையில், குவாண்டம் இயற்பியல் பிரிவில் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
குவாண்டம் இயற்பியலில் இவர்களின் கண்டுபிடிப்பின் மூலம், அதிவேக கணினிகளைத் தயாரிக்க முடியும். தற்போதுள்ளதை விட 100 மடங்கு துல்லியமான கடிகாரங்களையும் குவாண்டம் தொழில்நுட்பத்தில் உருவாக்க முடியும். தற்போதுள்ள கணினிகள், 0,1 என்ற இரு எண்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. அதாவது 0 அல்லது 1 என்று கணக்கிட்டுச் செயல்படுகின்றன. புதிய நடைமுறையில், 0 அல்லது 1 என்றோ, இரண்டுமே 0 என்றோ, இரண்டுமே 1 என்றோ ஒரே சமயத்தில் கணக்கிட்டுச் செயல்படும். இதனால், கணினிகள் அதிவேகத்தில் செயல்படும்.
பரிசுத் தொகை: பரிசுத் தொகையான 1.2 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.35 கோடி) இருவருக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படும்.
மருத்துவக்கான நோபல் பரிசு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. புதன்கிழமை வேதியியலுக்கான நோபல் பரிசும், வியாழக்கிழமை இலக்கியத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படவுள்ளன.
செர்ஜ் ஹரோச்சி: 1944ஆம் ஆண்டு வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் பிறந்த செர்ஜ் ஹரோச்சி, பாரிஸில் உள்ள எகோல் நோர்மல் சுப்பீரியர் பியர்ரி- மேரி க்யூரி பல்கலைக்கழகக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிகிறார்.
டேவிட் வைன்லேண்ட்: 1944ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த டேவிட் வைன்லேண்ட் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்றார். கொலராடோ பல்கலைக்கழகத்தில் உள்ள தேசிய தர மற்றும் தொழில்நுட்பத்துறையில் அணித்தலைவராகப் பணிபுரிகிறார்.
நோபல் பரிசு 1901-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல் சுவீடனைச் சேர்ந்தவர். 1833-ம் ஆண்டில் பிறந்தார். வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் திறமை பெற்றவராகத் திகழ்ந்தார்.
டைனமைட் வெடிபொருளை கண்டுபிடித்தவர். பெரிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தினார். தனது கடைசி உயில் மூலம் தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.
அவரது நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வைத்தும் மற்ற பிரிவுகளுக்கான பரிசுகள் சுவீடனிலும் வழங்கப்படுகின்றன.
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும் பரிசுத் தொகை தலா ரூ. 6.35 கோடி.

No comments:
Post a Comment