[Tuesday, 2012-10-09
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான மீள் விநியோகங்களை மேற்கொள்வதற்கான முதலாவது வர்த்தக ரீதியான சரக்கு விண்கலம் அமெரிக்க புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனாவெரல் விண்வெளி நிலையத்திலிருந்து நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. டிரகன் சரக்குக் கப்பல் ௭ன அழைக்கப்படும் தன்னியக்க ரீதியான மேற்படி ரோபோ விண்கலமானது பால்கன் ஏவுகணை மூலம் ஏவப்பட்டது.
இந்த விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள 6 விண்வெளி வீரர்களுக்கான 400 கிலோகிராம் நிறையுடைய உணவு, ஆடைகள், பரிசோதனை உபகரணங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் ௭டுத்துச் செல்லப்படுகின்றன.
மேற்படி விண்கலமானது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மேற்கொள்ளவுள்ள 12 பயணங்களில் முதற் பயணம் இதுவாகும். நாசா விண்வெளி நிலையத்துக்காக கலிபோர்னிய மாநிலத்திலுள்ள ஸ்பேஸ்௭க்ஸ் கம்பனி மேற்படி விண்கலத்தை செயற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாசா விண்வெளி நிலையமானது விண்வெளிக்கான தனது போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தனியார் துறையினரின் பங்களிப்பை ௭திர்பார்த்துள்ளது.
இந்நிலையில், ஸ்பேஸ்௭க்ஸ் நிறுவனம் மேற்படி விண்வெளி போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக நாசாவுடன் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உடன் படிக்கையை செய்து கொண்டுள்ளது.
No comments:
Post a Comment