- Monday, 08 October 2012
கஸ்டம்ஸ் சேவைகளுடன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வாரத்திற்கு சுமார் 70 விமான சேவைகளை அளித்து வருகிறது திருச்சி விமான நிலையம்.
மேலும் சரக்கு போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது
பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் நீண்டகால கோரிக்கையாக விடுத்துவந்தன. இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் திருச்சி, கோவை உள்ளிட்ட 5 விமான நிலையங்கள் சர்வ தேச நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். அதன்படி நேற்று முன்தினம் டெல்லியில் நட ந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம் திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தொழில் துறை, தக வல் தொழில்நுட்பம், ஏற்று மதி இறக்குமதி, சரக்கு போக்குவரத்து என பல துறைகளும் வளர்ச்சி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
விமான நிலைய ஆணைய குழும இணையதளம் தகவலின்படி இந்தியாவிலுள்ள விமான நிலையங்களுக்கு கடந்த ஓராண்டில் பயணிகள் வந்து சென்ற வளர்ச்சி விகிதத்தில் திருச்சி 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தரம் உயர்வுக்குப்பின் மேலும் முன்னேற்றமடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மதுரை விமானம் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கை மத்திய அரசினால் பாராமுகமாக கைவிடப்பட்டுள்ளதாகவும் மதுரை மாவட்ட மக்களால் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
No comments:
Post a Comment