Oct 28, 2012

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: தரிசனத்துக்கு 20 மணிநேரம் ஆகிறது


திருப்பதி, அக்.28-

திருமலையில் பக்தர்கள் கூட்டம் நேற்று சனிக்கிழமை அதிகமாக இருந்தது. வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பி 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் வெளியே காத்திருந்தனர். பக்தர்கள் கூட்டத்தை பார்த்து தேவஸ்தானம் மஹாலகு தரிசனத்தை பின்பற்றியது. கியூ காம்ப்ளக்ஸில் காத்திருந்த பக்தர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

சிறப்பு தரிசனத்துக்கு 6 மணி நேரமும், திவ்ய (நடைபாதை) தரிசனத்துக்கு 5 மணி நேரமும், தர்ம தரிசனத்துக்கு 20 மணி நேரமும் ஆனது. சனிக்கிழமை காலை 6 மணி முதல் 3 மணி வரை 46,668 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

பக்ரீத் மற்றும் வார இறுதி நாளில் விடுமுறை கிடைத்ததாலும் தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். ஐப்பசி மாதம் துலா மாதம் என்பதாலும் கூட்டம் அலைமோதியது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...