Oct 28, 2012

கனடா செய்தி கனடாவில் நிலநடுக்கம்: ஹவாய் தீவை சுனாமி தாக்கியது




[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012,
கனடாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஹவாயிலுள்ள சைன் தீவை சுனாமி தாக்கியுள்ளது.
கனடாவின் மேற்கு கடலோரப் பகுதியில் மாஸ்ஸெட் நகரில் இருந்து 139 கிலோ மீற்றர் தொலைவை மையமாகக் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டரில் 7.7 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்தது.
பின்னர் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி பேரலைகள் தாக்கலாம்
என்று எச்சரிக்கப்பட்டது.
தற்போது ஹவாய் தீவுகளை சுமார் 3 அடி உயர அளவிலான சுனாமி அலைகள் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இது 6 அடி உயரம் வரை எழுந்து தாக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் தாழ்வான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...