Oct 28, 2012

Sandy சூறாவளி நியூயோர்க்கை நோக்கி படையெடுக்கிறது : அச்சத்தில் பொதுமக்கள்


கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் தெற்கு பகுதிகளை தாக்கியுள்ள Sandy சூறாவளி, இன்று திங்கட்கிழமை, நியூயோர்க்கை நோக்கி நகர்கிறது.
இதையடுத்து நியூயோர்க்கின் ரயில், விமான போக்குவரத்துக்கள் முன்னெச்சரிக்கையாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு மாநில, மத்திய அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நியூயோர்க்கில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன்,

சுமார் 375,000 மக்கள் தாழ்வான பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.

இச்சூறாவளியின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என அஞ்சப்படுவதால் நியூயோர்க்கில் அவசரகால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சூறாவளியுடன் வெள்ளப்பெருக்கும் ஏற்படும் அபாயமிருப்பதால் நியூயோர்க்கை சுற்றி தற்காலிக தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும் கடந்த வாரம் தொடக்கம் இச்சூறாவளியால் கரிபியன் தீவுகளில் 60க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக தயாராகிவந்த ஒபாமா மற்றும் மிட் ரூம்னி ஆகியோர் தமது தேர்தல் பிரச்சாரங்களையும் ஒத்திவைத்துள்ளனர்.

எதிர்வரும் நவ.6ம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சாண்டி சூறாவளி மக்கள் வாக்கெடுப்பிற்கு இடையூறு விளைவிக்கும் வாய்ப்பிருப்பதாக கேள்வி எழுப்பட்ட போது பதில் அளித்த அமெரிக்க அதிபர் ஒபாமா, சாத்தியமிருப்பினும் எதிர்மறையாக நாம் எண்ணலாகாது. இது குறித்து தீவிரமாக அவதானித்து வருகிறோம் என கூறினார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...