டெல்லி:
லண்டனில் தன்னைத் தாக்கியது காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கிய
தீவிரவாதிகள் தான் என்று முன்னாள் ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல்
பிபார் குற்றம் சாட்டியுள்ளார்.
சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலில் பிந்தரன்வாலே தலைமையிலான தீவிரவாதிகள் ஆயுதங்களைக் குவித்து வைத்ததையடுத்து அங்கு ராணுவம் நுழைந்தது. தீவிரவாதிகளை ராணுவம் ஒடுக்கியது.
இதைடுத்து சீக்கிய பாதுகாவலர்களால் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்
கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலை முன்னின்று நடத்திய லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ். பிரார் தீவிர பாதுகாப்பில் வசித்து வருகிறார். இந் நிலையில் சில நாட்களுக்கு முன் மனைவியுடன் லண்டன் சென்ற அவரை 4 பேர் கொண்ட கும்பல் ஹோட்டல் அறையில் புகுந்து கடுமையாகத் தாக்கியது.
இதில் அவர் மிக பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு பஞ்சாப் மாநில அரசு தான் பாதுகாப்பு அளித்து வருகிறது. இவர் வெளிநாடு சென்றாலும் மத்திய அரசிடம் பேசி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது பஞ்சாப் அரசு தான்.
ஆனால், இவரது லண்டன் பயணம் குறித்து எந்த கவலையும்படாமல் இருந்துள்ளது பஞ்சாபை ஆளும் அகாலிதள அரசு. இந் நிலையில் தான் லண்டனில் இவரையும் இவரது மனைவியையும் ஒரு கும்பல் தாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலை நடத்தியது காலிஸ்தான் கோரும் தீவிரவாதிகள் தான் என்றும், பொற்கோவிலுக்குள் நடந்த தாக்குதலில் இறந்த சீக்கிய தீவிரவாதிகளுக்கு கோவிலுக்குள்ளேயே நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதை மாநில அரசு தடுக்கவில்லை என்றும், தீவிரவாதிகளுக்கு மாநில அரசு முழு ஆதரவு தந்து வருவதாகவும் பிரார் குற்றம் சாட்டியுள்ளார்.
தீவிர சிகிச்சையில் உள்ள அவர் அடுத்த சில நாட்களில் நாடு திரும்பவுள்ளார். தாக்குதல் நடக்கும் வரை லண்டனில் எந்தப் பாதுகாப்பையும் ஏற்பாடு செய்யாத இந்தியா இப்போது இவருக்கு முழுப் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இங்கிலாந்து ராணுவ அதிகாரி தலைமையில், ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் இவருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
மேலும் இந்திய உளவுப் பிரிவினரான ரா அதிகாரிகளும் அங்கு விசாரணையில் இறங்கியுள்ளனர்.

No comments:
Post a Comment