Oct 3, 2012

கோமா’வுக்கு காரணம்


kom
மனிதர்களுக்கு நீண்டகாலம் நினைவு பாதிக்கப்படுவது `கோமா’ எனப்படுகிறது. இந்த கோமா எப்படி ஏற்படுகிறது? இதற்கு மருத்துவர்கள் பல காரணங்களைச் சொல்கிறார்கள். அவற்றில் முக்கியக் காரணம், மூளையில் அடிபடுவது. மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக்கொள்ளும் தன்மையுடையவை.
அத்தகைய மூளை அடிபட்டு உள்ளே ரத்தக் கசிவு ஏற்பட்டால் மூளையின் அனைத்துப் பகுதிகளுமோ அல்லது ஒரு பகுதி மட்டுமோ செயலிழக்கிறது. மூளையின் ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்படும்போது அந்தக் காலகட்ட
நினைவுகள் மட்டும் பாதிக்கப்படும்.
அந்த நினைவுகள் மீண்டும் வராமல் போகும். இது ஒருவகை கோமா என்று அழைக்கப்படுகிறது. இன்னொரு வகை கோமாவில் மூளையில் சகல பகுதிகளும் பாதிக்கப்படுகின்றன. ஆனால் அனிச்சைச் செயல்களான சுவாசத்தையும், இதயத்துடிப்பையும் மட்டும் எதுவும் செய்வதில்லை. அதனால் உயிர் மட்டும் இருக்கும்.
விளைவு, கோமா. மற்றொரு காரணம், `ஸ்ட்ரோக்’. மூளைக்குள் ரத்தக் கட்டி ஏற்பட்டு அல்லது அதிக ரத்த அழுத்தத்தால் மூளைக்குள் ரத்தம் கசிந்து மூளைச் செல்களைக் கடுமையாகப் பாதிக்கும். அதை `செரிப்ரல் திராம்பாசிஸ்’, `செரிப்ரல் எம்போசிஸ்’ என்று பிரிக்கிறார்கள்.
மூளையில் சேதம் அதிகம் இல்லையென்றால் கோமாவில் இருந்து வெளியே வருவது சுலபம். நிறையப் பேர் அவ்வாறு மீண்டிருக்கிறார்கள். சிலர் வருடக் கணக்கில் கோமாவில் இருந்துவிட்டு வெளியே வந்து நலமாக வாழ்கிறார்கள். இறுதிவரை அப்படியே இருந்து இறந்து போகிறவர்களும் உண்டு.
கோமாவில் இருந்து மீள்வதும், மீளாததும் மூளையில் ஏற்படும் சேதத்தின் அளவைப் பொறுத்தது. பொதுவாக தலையில் அடிபடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக தலைக்கவசம் (ஹெல்மட்) அணிய வேண்டும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...