Oct 3, 2012

ஆண் -பெண்களுக்கு இருக்க வேண்டிய ஹீமோகுளோபின்


thalaரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14-18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12-16 கிராம் அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, ரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனை சாலையில்
ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும்.
ஹீமோ குளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின் போது நுரையீரலுக்கு சென்று நாம் மூச்சு காற்றை உள்ளே இழுக்கும் போது அந்த மூச்சுக்காற்றில் உள்ள ஆக்சிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது.
பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்சைடு அக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...