லண்டன்: ஈக்வெடார் நாட்டு தூதரகமே கதியென இருப்பது விண்வெளி நிலையத்தில் இருப்பது போல உள்ளது என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் கூறினார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குறித்த ரகசிய தகவல்களை தனது இணைய தளமான விக்கிலீக்சில் வெளியிட்ட அவர் மீது சுவீடனில் செக்ஸ் வழக்கு தொடரப்பட்டது. இதற்காக தான் சுவீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க லண்டனில் உள்ள ஈக்வெடார்
நாட்டு தூதகரத்தில் ஜூன் 19ம் தேதி தஞ்சம் புகுந்தார்.
இந்நிலையில் அங்கு உள்ள செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ''இப்போது நான் விண்வெளி நிலையத்தில் இருப்பதைப்போல உள்ளேன். தினமும் 17 மணி நேரம் எனது இணைய தளம் தொடர்பான பணிகளை செய்து வருகிறேன். ஈக்வெடார் நாட்டுக்கு விரைவில் சென்று விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அங்கிருந்து நானும், எனது நிறுவனத்தினரும் நட்பு நாடுகளான துனீசியா, எகிப்து, ரஷ்யா, பிரேசில், இந்தியா, வெனிசூலா, சிலி, அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு பாதுகாப்பாக செல்ல முடியும்'' என்றார்.
No comments:
Post a Comment