ஒபீஸ் 2013ல் உருவாக்கப்பட்ட பைல்களை, விண்டோஸ் போனில் படிக்கலாம். ஸ்கை ட்ரைவ் மற்றும் ஷேர் பாய்ண்ட் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும், மாறா நிலையில் ஸ்கை ட்ரைவில் பதிந்து வைக்கப்படும்.
எனவே எங்கிருந்தும், எந்த சாதனம் மூலமாகவும், உங்கள் பைல்களை நீங்கள் பெற்று படித்துக் கொள்ளலாம்.
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம், கம்ப்யூட்டர் இயக்கத்தினை முற்றிலுமான ஒரு மாறுதலுக்குக் கொண்டு வந்த மைக்ரோசாப்ட், தற்போது தன் ஒபீஸ் தொகுப்பிலும் அதே வேகத்துடன் மாற்றங்களையும் கூடுதல் வசதிகளையும் கொண்டுள்ளது. எக்ஸெல், வேர்ட் மற்றும் பவர்பாய்ண்ட் ஆகிய அனைத்தும் முழுமையான மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.
No comments:
Post a Comment