Nov 18, 2012

காஸா: தொலைக்காட்சி அலுவலகம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

காஸா சிட்டி, நவ. 18-

பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியை ஹமாஸ் தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இவர்களுக்கும், அண்டை நாடான இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் தென்பகுதியில் உள்ள ஜேவிஷ் மாகாணம் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் 120-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

அதில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து காஸா பகுதி மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசி வருகிறது. இதனால், பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. அதில் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே, இஸ்ரேல் தாக்குதலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இஸ்ரேல் வடக்கு பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கி வருகின்றனர்.  இதனால், காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் காஸாவில் போர் பதட்டம் நிலவுகிறது.

பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. அதிபர் ஒபாமா இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாஹீவுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார்.

தன்னை பாதுகாத்து கொள்ள காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஓபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 5 நாட்களாக காஸா மீது இஸ்ரேல் கடுமையான கடல்வழி மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளும் வரை காஸா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காஸா நகரத்தில் உள்ள ஹமாஸ் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தின் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கட்டிடம் தரை மட்டம் ஆகியது. இதுவரை இஸ்ரேல் நடத்தியுள்ள புதிய தாக்குதல்களில் 48 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், காஸா நகரில் உள்ள லெபனான் நாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பு அலுவலகத்தின் மீது, இஸ்ரேல் இன்று ஏவுகனை தாக்குதல் நடத்தியது.

இதில் கடுமையான சேதம் ஏற்பட்டதாக தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். உயிர்சேதம் குறித்த தகவல்கள் ஏதும வெளியாகவில்லை
.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...