சென்னை, நவ. 18-
தமிழ்நாட்டில்
வடகிழக்கு பருவமழை தொடங்கிய சில நாட்கள் மட்டுமே பரவலாக மழை பெய்தது. அதன்
பிறகு நீலம் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. பின்னர்
படிப்படியாக மழை குறைந்து முற்றிலும் நின்றுவிட்டது. கடந்த 2 வாரங்களாக மழை
பெய்யாமல் வெயில் அடித்தது. இரவில் கடும் பனிப்பொழிவு உள்ளது.
வறண்ட
கால நிலையுடன் பனி பெய்வதால் இனி மழை இருக்காது என்று பலரும்
ஆதங்கப்பட்டனர். இந்த நிலையில் வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை
உருவாகி உள்ளதால் மழை மீண்டும் பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-
வங்க
கடலில் சென்னை கிழக்கு வடகிழக்கு திசையில் 1050 கிலோ மீட்டர் தொலைவில்
புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது முதலில் வடமேற்கு
திசை நோக்கி நகர்ந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30
மணி நிலவரப்படி சென்னைக்கு அப்பால் 950 கிலோ மீட்டர் தூரத்தில் நகர்ந்து
வந்துள்ளது.
இது மேலும் மேற்கு வடமேற்கு திசை நோக்கி
நகர்ந்து புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாடு ஆந்திரா
பகுதிக்கு இன்று மழை இருக்காது. 3 நாட்களுக்கு பிறகு 2 மாநில கடலோர
மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வங்க
கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி நகர்ந்து வருவதால்
தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்ய இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment