Sep 17, 2012

விக்கிலீக்ஸ் நிறுவனர் கருத்து இன்னும் ஓராண்டுக்கு ஈக்வெடார் தூதரகமே கதி


லண்டன் : அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் குறித்து பல்வேறு ரகசிய தகவல்களை தனது விக்கிலீக்ஸ் இணைய தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இதில், அமெரிக்காவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அசாஞ்ச் மீது சுவீடனில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சுவீடனு க்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சமடைந்த அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வெடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.

குறையின்றி செயல்படுகிறது கியூரியாசிட்டி விண்கலன்

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி எந்த குறைபாடும் இல்லாமல் சிறப்பாக செயல்படுகிறது என்று நாசா விஞ்ஞானிகள் பெருமிதம் தெரிவித்தனர். செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா, ஏற்கெனவே அங்கு உயிர்கள் இருந்துள்ளனவா என்று

சீனாவில் தொடர்கிறது ஜப்பானுக்கு எதிராக மக்கள் போராட்டம்



பீஜிங் : சீனாவில் ஜப்பானுக்கு எதிரான மக்களின் போராட்டம் நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. போராட்டத்தை நிறுத்தி, அமைதி காக்குமாறு சீன அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடைப்பட்ட கிழக்கு சீன கடலில் ஒரு

சர்வதேச விண்வெளி மையத்தின் தலைமை பொறுப்பில் சுனிதா

சாதனைக்கு மேல் சாதனை


ஹூஸ்டன் : விண்வெளியில் சாதனைக்கு மேல் சாதனை செய்து கொண்டிருக்கும், அமெரிக்கா வாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த சாதனையாக சர்வதேச விண்வெளி மையத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். அமெரிக்கா வாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (46). இவர் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். தற்போது, விண்ணில்  சுற்றிவரும் சர்வதேச விண்வெளி

700 கி.மீ. தூரம் சென்று தாக்கும் பாபர் ஏவுகணை பாகிஸ்தான் சோதனை


இஸ்லாமாபாத் : அணுகுண்டை ஏந்திச் சென்று 700 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட பாபர் ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தேசிய ஆணையம்

சென்காகு தீவு விவகாரம் சீனாவில் மக்கள் போராட்டம் ஜப்பான் நிறுவனங்கள் சூறை



பீஜிங் : சென்காகு தீவு விவகாரத்தில், ஜப்பானுக்கு எதிராக சீனாவில் நடக்கும் போராட்டங்கள் மோசமான நிலையை எட்டியுள்ளன. ஜப்பானைச் சேர்ந்த பானசோனிக், கேனான் தொழிற்சாலைகள் சூறையாடப்பட்டன. ஜப்பானியர்கள் சென்காகு என்றும்,

Sep 15, 2012

யாஹூவின் புதிய சிஇஒவாக முன்னாள் கூகுள் துணைத் தலைவர் மரிஸா மேயர் நியமனம்

 Marissa Mayer Is The New Ceo Yahoo
சன்னிவேல்: யாஹூ இணைய தளத்தின் முதன்மை செயல் அதிகாரியாக மரிஸா மேயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுநாள்வரை கூகுள் தேடுதளத்தின் துணைத்தலைவராக இருந்த அவர் இன்று முதல் யாஹூவின் சி.இ.ஒ வாக பணியை தொடங்குகிறார்.
1999ம் ஆண்டு கூகுளின் முதல் பெண்

கூகுள் முன்னாள் சிஈஓ சம்பளம் 1 மில்லியன் டாலரிலிருந்து 1.25 மில்லியன் டாலராக உயர்ந்தது!


.
 Google Ex Ceo Eric Schmidt Salary Rises 1 25 Dollar Aid0216வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும் தற்போதைய செயல் தலைவருமான எரிக் ஸ்மித்தின் ஆண்டு ஊதியமானது 1 மில்லியன் டாலரில் இருந்து 1.25 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

2010-ம் ஆண்டில் அவர் 1 மில்லியன் டாலர் பெற்றிருந்தார். கடந்த 2011-ம் ஆண்டில் 1.25 மில்லியன் டாலர் அவருக்கு கிடைத்தது.

கூகுள் நிறுவனத்தில் ஸ்மித்துக்கு அடுத்த நிலையில் ஊதியம் பெறுவோரைவிட இது 4 மடங்கு அதிக உயர்வு. கூகுளின் மற்றொரு நிறுவனரான லர்ரி பேஸ் இப்பொழுது தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். அதேபோல் நிறுவனர்களில் மற்றொருவர் செர்ஜி பெயின். இருவரும் பெறும் தொகையைவிட இது கூடுதலாகும். இருவரும் தமது சொத்துகளின் பெரும்பகுதியை நேரடியாக கூகுளின் பங்குகளில் இணைத்திருக்கின்றனர்.

ஸ்மித் பொறுப்பேற்ற பிறகு கூகுள் தேடுதளமானது முன்னைவிட கூடுதல் மதிப்பைப் பெற்றுள்ளது. அவரால் தோராயமாக 38 பில்லியன் டாலர் கூடுதல் வருமானத்தை கடந்த ஆண்டு உருவாக்க முடிந்திருக்கிறது.

ஸ்மித்துக்கு அடுத்ததாக கூகுள் நிறுவனத்தில் கூடுதல் ஊதியம் பெறுபவர் வர்த்தக நடவடிக்கைகளுக்கான தலைமை அதிகாரி நிகேஷ் அரோரா. 2010-ம் ஆண்டு 22.6 மில்லியன் டாலர் பெற்றிருந்த அவர் கடந்த ஆண்டு 23.2 மில்லியன் டாலரைப் பெற்றிருக்கிறார்.

Sep 14, 2012

அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: லிபியாவில் 22 பேர் கைது- 9 நாடுகளில் கலவரம் பரவியது



அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: லிபியாவில் 22 பேர் கைது- 9 நாடுகளில் கலவரம் பரவியதுபென்காசி, செப். 14-

முஸ்லிம்களை மோசமாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட சினிமா படத்தை கண்டித்து பல நாடுகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் லிபியாவில் பென்காசி நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடந்தது. ராக்கெட் குண்டுகளை வீசி பயங்கரமாக தாக்கினார்கள். இதில் அமெரிக்க தூதர் கிரீஸ் ஸ்டீவன்ஸ் உள்பட 4 அமெரிக்க தூதரக அதிகாரிகள்

சூறாவளி தாக்கும் என பயந்து குளிர்சாதன பெட்டியில் 4 நாட்கள் பதுங்கிய பெண்: உறைந்த நிலையில் உயிருடன் மீட்பு



நியூயார்க், செப்.14-
 
அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா மாகாணத்தில் வசித்து வந்தவர் தெரசா கிரிஸ்டியன் (59).  இவரை சில தினங்களாக காணவில்லை என்று அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்து தேடிவந்தனர்.

கவுதமலாவில் எரிமலை வெடிக்கும் அபாயம்: 1 லட்சம் பேர் வெளியேற்றம்



கவுதமலாவில் எரிமலை வெடிக்கும் அபாயம்: 1 லட்சம் பேர் வெளியேற்றம்கவுதமலாசிட்டி,செப். 14-

வட அமெரிக்காவில் உள்ள கவுதமலா நாட்டில் “பியூகோ” என்ற இடத்தில் மிகப்பெரிய எரிமலை உள்ளது. அந்த எரிமலை வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, அது பயங்கர சத்தம் எழுப்பி வருகிறது. அதில் இருந்து சாம்பலும், புகையும் வெளியாகிறது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...