பென்காசி
வெள்ளிக்கிழமை,
செப்டம்பர் 14,
பென்காசி, செப். 14-
முஸ்லிம்களை மோசமாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட சினிமா படத்தை கண்டித்து பல நாடுகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் லிபியாவில் பென்காசி நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடந்தது. ராக்கெட் குண்டுகளை வீசி பயங்கரமாக தாக்கினார்கள். இதில் அமெரிக்க தூதர் கிரீஸ் ஸ்டீவன்ஸ் உள்பட 4 அமெரிக்க தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. லிபியா பிரதமர் முஸ்தபா அபுஷாகரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 22 பேரை லிபியா போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக லிபியா உள்துறை மந்திரி வான்னிஸ் அல் ஷெரீப் கூறும்போது, தாக்குதல் தொடர்பாக பலரை நாங்கள் கைது செய்து இருக்கிறோம். இவர்கள் எந்த ஒரு அமைப்பையும் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதற்கு தூண்டுகோளாக இருந்தவர்கள் யார் என்பதை பற்றியும் விசாரித்து வருகிறோம் என்றார். மேலும் லிபியாவில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். லிபியாயை அடுத்து எகிப்து மற்றும் ஏமன் நாடுகளிலும் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடந்தது.
ஏமனில் சனா நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினார்கள். தூதரகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. அமெரிக்க கொடிகளையும் எரித்தனர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். தடியடியும் நடத்தப்பட்டன. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அதேபோல் எகிப்து நாட்டில் கெய்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திலும் தாக்குதல் நடந்தது. அவர்களை போலீசார் அடித்து விரட்டினார்கள். போலீசார் மீது கலவரக்காரர்கள் கல்வீசி தாக்கினார்கள். இந்த கலவரத்தில் 224 பேர் காயம் அடைந்தனர். விடிய, விடிய அங்கு மோதல்கள் நடந்து வந்தன.
இதேபோல் வங்களாதேசம், ஈரான், மொராக்கோ, சூடான், துனுசியா ஆகிய நாடுகளிலும் அமெரிக்காவுக்கு எதிராக கலவரம் நடந்து வருகிறது. இதுவரை 9 நாடுகளில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்கு புனித நாளாகும். அப்போது பல்லாயிரணக்கானோர் கூடி தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். இவ்வாறு கூடுபவர்கள் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பல்வேறு நாடுகளிலும் பாதுகாப்புகள் பலத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே அனைத்து நாடுகளிலும் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது. அமெரிக்கர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா கூறியிருக்கிறது

No comments:
Post a Comment