புராதனகால சோமபானத்தில் இருந்து இன்றைய நாகரிக உலகத்தில் புதிது புதிதாக
கலக்கப்பட்டு பகிரப்படும் விதவிதமான குடிவகைகள் வரை போதை என்பது மனித
குலத்தை வாழ்வியலின் ஒவ்வொரு கட்டத்திற்கும் அவனுடனேயே ஒட்டிக்கொண்டே
வருகின்றது.
சாத்தானின் சாபமாகவும், தேவதையின் பரிசாகவும் ஒவ்வொருவராலும் விதம்விதமாக
இந்த குடிபானங்கள் பற்றி வியாக்கியானப்படுத்தப்பட்டு வருகின்றது.
எமது அன்றாட வாழ்வில்கூட குடிப்பதற்காக உழைத்து நிறைபோதையில்
சுழன்றுவிழும் குடிமகன்களையும் கண்டிருக்கின்றோம், அதேபோல ஏழுநட்சத்திர
ஹோட்டல்களில் ஆடம்பர மிடுக்கோடு விதவிதமான விலையுயர்ந்த குடிபானங்களை
உட்கொள்ளும் மிடுக்குகளையும் பார்த்திருக்கின்றோம்.
அந்த வகையில் உலகில் அதிகம் மிடுக்கோடு நுகரப்படும் ( ஆனந்தத்தோடு
அருந்தப்படும்) 10 குடிபானங்களை இப்போது உங்களுக்கு
ஊத்திக்கொடுக்கப்போகிறேன்......
பியர் அல்லது (இந்திய நண்பர்களுக்கு பீர்)
இன்று உலகலாவிய ரீதியில் குடிவகை பானங்கள் என்ற வகைப்படுத்தில் மிக அதிகமாக
அருந்தப்படும் பானமாக பியர் உள்ளது.
பியர் தயாரிப்பு பண்டைய நாட்களில் இருந்தே நெறிப்படுத்தப்பட்டு வருவதாக
அறியமுடிகின்றது.
'பார்லித் தண்ணி' என்று நண்பர் வட்டாரத்தில் பியரை அழைப்பத்திலும் அறிவியல்
உண்மை ஒன்று உள்ளது. குறிப்பாக பியர் வகைகள் தானியங்களில் இருந்து
பெறப்படும் மாப்பொருட்களை நொதிக்க வைத்தே வடித்தெடுக்கப்படுகின்றன.
முக்கிமாக பார்லி தானியம் இதற்கு எடுக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா