Oct 7, 2012

ஈரான் மேலும் ஏவுகணை சோதனை; மேற்குலகில் பதற்றம்

ஈரான் மேலும் இரு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளது. பெர்ஷிய வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு இடையில் உள்ள ஹமுஸ் நீரிணையில் நடந்த ஈரான் கடற்படை பயிற்சியின் இறுதி நாளான நேற்று முன்தினம் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் தரையில் இருந்து கடலில் உள்ள போர்க் கப்பலைத் தாக்கும் ஏவுகணை மற்றும் கடலில் இருந்து போர்க் கப்பலை தாக்கும் ஏவுகணைகளே வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கடற்படைத் தளபதி மஹ்மூத் மவுசாவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காதர் மற்றும் நாசர் என்ற இந்த இரு ஏவுகணைகள் தமது இலக்கை மிகச் சரியாக தாக்கி அழித்து ள்ளன. இவை ராடரின் கண்காணிப்பில் சிக்காது” எனத் தெரிவித்தார். தரையில் இருந்து போர்க் கப்பலைத் தாக்கும் காதர் ஏவுகணை 200 கி.மீ. தூரம்வரை சென்று தாக்கக்கூடியது.
அதேபோன்று கடலில் இருந்து போர்க் கப்பலைத் தாக்கும் நாசர் ஏவுகளை 35 கி. மீ. தூரம் செல்லக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணை ஒன்றை ஈரான் சோதித்திருந்தது.
அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு ஈரான் மீது அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையிலேயே ஈரான் இந்த ஏவுகணைச் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. ஈரானின் இந்த செயல் சர்வதேசத்திற்கு அபாயகரமான சமிக்ஞை என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் பெர்னாட் வலெரோ குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வளைகுடா நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் பயணிக்கும் ஹமுஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரான் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கமைய அங்கு இடம்பெற்ற ஈரான் கடற்படை பயிற்சியின்போது அது தொடர்பான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை தளபதி மஹ்மூத் மஹ்சாவி குறிப்பிட்டார்.

நோர்வேயில் தரையொதுங்கிய பல்லாயிரக்கணக்கான மீன்கள்

வடக்கு நோர்வே கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து கரையொதுங்கியுள்ளன. இவ்வாறு பல தொன் கணக்கான மீன்கள் கரையொதுக்கியதற்கான காரணம் குறித்து ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு தரையொதுங்கிய மீன்கள் அழுகிவரும் நிலையில் அவைகளை அகற்றும் பணியில் ஊர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் மீன்கள் தரையொதுங்கியதற்கு பல்வேறு ஊகங்கள்

யுத்த நிறுத்தத்தை முழுமையாக கடைபிடிக்குமாறு சிரிய அரசுக்கு அரபு லீக் அழுத்தம்




சிரிய இராணுவம் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறியுள்ள தாகவும் ஆனால் அங்கு துப்பாக்கிசூட்டு சம்பவங்கள், ஸ்னைப்பர் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் அரபு லீக் அமைப்பின் செயலாளர் நாயகம் நபில் அல் அரபி குறிப்பிட்டுள்ளார்.
அரபு லீக் கண்காணிப்பாளர்கள் சிரியாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அது குறித்து விளக்கு ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் அரபு லீக் தலைமையகம் அமைந்தள்ள எகிப்து தலைநகர்

அமெரிக்க யுத்த கப்பலுக்கு ஈரான் எச்சரிக்கை


மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீண்டும் தனது வளைகுடாவில் உள்ள படைத் தளத்திற்கு திரும்ப முடியாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹமுஸ் துறைமுகத்தில் கடந்த 10 நாட்களாக ஈரான் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இதன் போது வளைகுடா நாடுகளின் எண்ணெய்க் கப்பல்கள் செல்லும் மேற்படி துறைமுகத்தை மூடுவது குறித்து ஈரான் எச்சரிக்கை விடுத்தது. நேற்று முன்தினம் இந்த கடற்படை பயிற்சிகள் முடிவடைந்தன.
இந்நிலையில் ஈரான் இராணுவத் தளபதி ஜெனரல் அதவுல்லா சலாஹி அமெரிக்காவுக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானின் அரச ஊடகமான ‘இர்னா’வுக்கு அவர் அளித்த போட்டியில், ‘ஹமுஸ் துறைமுகத்தைக் கடந்து வளைகுடாவின் ஓமானுக்கு சென்றுள்ள அமெரிக்க

Oct 6, 2012

ஆக்சிஜன் இன்றி விண்வெளியில் 553 நாட்கள் உயிர்வாழும் பாக்டீரியாக்கள்!



ஆக்சிஜன் இல்லாத இடத்தில் பாக்டீரியாக்கள் எத்தனை நாட்கள் உயிர்வாழும் என விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதற்காக இங்கிலாந்தில் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு மலையின் செங்குத்தான பாறையில் இருந்து சில பாக்டீரியாக்களை சேகரித்தனர்.


அவற்றை ஆக்சிஜன் இல்லாத விண்வெளிக்கு எடுத்து சென்றனர். அங்கு வைத்து சோதனை செய்தனர். அப்போது அந்த பாக்டீரியாக்கள், 553 நாட்கள்

பூமியை மாசடைய செய்யும் முதல் ஏழு நாடுகளில் ஆஸ்திரேலியா, டென்மார்க்!



உலக வன உயிரியல் நிதியம் (WWF) நடத்திய கணக்கெடுப்பு ஒன்றில் சுற்றுச் சூழல் மாசடைவதில் உலக நாடுகள்வகிக்கும் பங்கில் அவுஸ்திரேலியா 7 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கார்பன் வாயுவும், அதிகரித்து வரும் சனத்தொகை மற்றும் வாகனப் போக்குவரத்தும் ஆகும் என

கெட்ட கொழுப்பினால் ஏற்படும் விளைவுகள்!



நமது உடலில் தீமை விளைவிக்கும் கொழுப்பு, நன்மை தரும் கொழுப்பு என இரண்டு வகைகள் உள்ளது. இரண்டுமே சம அளவில் இருந்தால் மட்டுமே உடல் நிலை சமநிலைப்படும்.தீமை பயக்கும் கொழுப்பின் அளவு அதிகரித்தால் உடல் பருமன், இதய பாதிப்புகள் ஏற்படும். அது மட்டுமின்றி மூளை செயல்பாடு, நினைவாற்றலும் பாதிக்கப்படும் என்பது தற்போதைய ஆய்வில் தெரியவந்தது.


அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ப்ரிகாம் அண்ட் உமன்ஸ் மருத்துவமனை இதுதொடர்பாக 4 ஆண்டுகால தொடர் ஆய்வு நடத்தியது. முதல்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட 40 ஆயிரம் பெண்களின் மருத்துவ

சீனாவில் காணப்படும் இராட்சத சலமண்டர்கள்!



பல்லியின் தோற்றத்தைக் கொண்ட சலமண்டர்கள் எனப்படுவது பொதுவாக நீர் நிலைகளில் வாழும் ஊர்வன இனத்தைச் சார்ந்த விலங்கு ஆகும்.சிறிய இனத்தைச் சேர்ந்த சலமண்டர்கள் வாலின் நீளம் உள்ளடங்கலாக 2.7 சென்டிமீட்டர்கள் வரை வளரக்கூடியன. ஆனால் சீனாவில் காணப்படும் சலமண்டர்கள் சுமார் 1.8 மீட்டர்கள் நீளமானதாக

நாய் எப்படி மோப்பம் பிடிக்கிறது



உலகம் முழுவதும், பிலட்த்ஹௌந்து எனப்படும் நாய்தான் துப்பறிவதற்கு அதிகம் பயன்படுகிறது. காணாமல் போன குழந்தைகளைப் பிடிப்பதற்கு பேர் போனது. பொதுவாக நாய்கள் மனிதனைவிட 50 மடங்கு மோப்ப சக்தி மிக்கது என்றாலும், பிலடுவிடம் ஏராளமான மோப்ப செல்கள் உள்ளன. மனிதனிடம் 10/ச.செ.மீ. பிலடுக்கு 170/ச.செ.மீ. பரப்பில் மோப்ப செல்கள் உள்ளன. நீங்கள் அடுப்பங்கரையில் நுழையும்போது கறிவாசனை வந்தால் அது கொஞ்ச நேரத்தில் நமக்குத் தெரியாமல் போய் விடுகிறது. ஆனால் மோப்ப நாய்க்கு அப்படி இல்லை. எப்படி இவை மோப்பம் பிடிக்கின்றன தெரியுமா..? நம் உடலிலிருந்து விழுந்த

பனிக்கட்டி ரகசியமும் பனி ஊழிக்காலமும்!



நம் பூமியில் சுமார் 70 % நீர் உள்ளது. இந்த நீர்தான் உயிர்களின் ஆதாரம். நீரின்றி உயிரில்லை. வட தென் துருவங்களில் பனி உறைந்து போய் கிடக்கிறது. மனிதன் தவிர பிற உயிரினங்கள் அந்த வாழ்நிலைக்குத் தகுந்தாற்போல் தம்மை தகவமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பனிப்பாறை இன்றி பனிக்கரடி, பனி சிறுத்தை, பெங்குவின், பனி நரிகள், சீல், மற்றும் பனிக்கட்டிகளில், அந்த உறைப் பனிக்குளிரை அனுபவித்து, சந்தோஷமாய் விளையாடி வாழும் விலங்கினங்கள்,, ஏராளம், ஏராளம். அந்த விலங்கினங்கள் பற்றி இன்னும் முழுமையாக நமக்குத் தெரியவில்லை.

மனித இனத்தை விரைவாக அழிக்கப் புறப்படும் சூப்பர் வொல்கனோக்கள் : அமெரிக்க ஆய்வில் தகவல்



அமெரிக்கா உட்பட உலகின் முக்கியமான பல நாடுகளில் காணப்படும் சூப்பர் வொல்கனோ எனும் உயிர் எரிமலைகள் இதுவரை கணிக்கப் பட்டதை விட மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லதுடன் மனித இனத்தை மிக வேகமாக அளிக்கக் கூடியன என்றும் சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


இவ் எரிமலைகள் ஏற்படுத்தக் கூடிய ஆபத்து மிகப் பெரிய எரிகல் ஒன்று பூமியுடன் மோதினால் ஏற்படும் விளைவை விட மோசமானது என்றும் கூறப்படுகின்றது. மேலும் சுமார் 100 000 வருடங்களாக உயிர்ப்புடன் உறங்கிக்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...