ஹமுஸ் துறைமுகத்தில் கடந்த 10 நாட்களாக ஈரான் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இதன் போது வளைகுடா நாடுகளின் எண்ணெய்க் கப்பல்கள் செல்லும் மேற்படி துறைமுகத்தை மூடுவது குறித்து ஈரான் எச்சரிக்கை விடுத்தது. நேற்று முன்தினம் இந்த கடற்படை பயிற்சிகள் முடிவடைந்தன.
இந்நிலையில் ஈரான் இராணுவத் தளபதி ஜெனரல் அதவுல்லா சலாஹி அமெரிக்காவுக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானின் அரச ஊடகமான ‘இர்னா’வுக்கு அவர் அளித்த போட்டியில், ‘ஹமுஸ் துறைமுகத்தைக் கடந்து வளைகுடாவின் ஓமானுக்கு சென்றுள்ள அமெரிக்க
யுத்த கப்பல் மீண்டும் தனது படைத்தளமான பெர்சிய வளைகுடாவுக்கு திரும்ப முடியாது. இது எமது எச்சரிக்கையாகும். இதனை நாம் மீண்டும் ஒருமுறை கூறமாட்டோம்” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய யுத்த கப்பல்களுள் ஒன்றான யு.எஸ்.எஸ். ஜோன் சி ஸ்டெனிஸ் மீதே ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த கப்பல் கடந்த வாரம் வழமையான பாதையில் ஹமுஸ் துறைமுகத்தை தாண்டி ஓமான் துறைமுகத்தை சென்றடைந் துள்ளது. இது மீண்டும் ஹமுஸ் துறைமுகத்தினூடாக பஹ்ரைனிலுள்ள அமெரிக்க படைத்தளத்திற்கு திரும்பவுள்ளது. அமெரிக்க யுத்த கப்பல்கள் இவ்வாறு மாதத்திற்கு அல்லது வாரத்திற்கு ஒருமுறை இந்த கடற் பாதையினூடாக சென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment