நோர்வேயில் தரையொதுங்கிய பல்லாயிரக்கணக்கான மீன்கள்
வடக்கு நோர்வே கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து கரையொதுங்கியுள்ளன. இவ்வாறு பல தொன் கணக்கான மீன்கள் கரையொதுக்கியதற்கான காரணம் குறித்து ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு தரையொதுங்கிய மீன்கள் அழுகிவரும் நிலையில் அவைகளை அகற்றும் பணியில் ஊர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.எனினும் மீன்கள் தரையொதுங்கியதற்கு பல்வேறு ஊகங்கள்
வெளியாகியுள்ளன. அண்மையில் ஏற்பட்ட புயல் ஒன்று காரணமாக கரையொதுக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஆழமற்ற கடலில் சிக்கி இவ்வாறு தரைக்கு அடித்துவரப்பட் டிருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.
அதேபோன்று ஏதாவது நோய் காரணமாகவும் இவ்வாறு மீன்கள் செத்திருக்கலாம் என்று கடல் ஆராய்ச்சி நிறுவனமான ஜென்ஸ் கிறிஸ்டியன் ஹொல்ட் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment