ஈரான் மேலும் இரு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளது. பெர்ஷிய வளைகுடா மற்றும்
இந்தியப் பெருங்கடலுக்கு இடையில் உள்ள ஹமுஸ் நீரிணையில் நடந்த ஈரான் கடற்படை
பயிற்சியின் இறுதி நாளான நேற்று முன்தினம் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் தரையில் இருந்து கடலில் உள்ள போர்க் கப்பலைத் தாக்கும் ஏவுகணை மற்றும் கடலில் இருந்து போர்க் கப்பலை தாக்கும் ஏவுகணைகளே வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கடற்படைத் தளபதி மஹ்மூத் மவுசாவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காதர் மற்றும் நாசர் என்ற இந்த இரு ஏவுகணைகள் தமது இலக்கை மிகச் சரியாக தாக்கி அழித்து ள்ளன. இவை ராடரின் கண்காணிப்பில் சிக்காது” எனத் தெரிவித்தார். தரையில் இருந்து போர்க் கப்பலைத் தாக்கும் காதர் ஏவுகணை 200 கி.மீ. தூரம்வரை சென்று தாக்கக்கூடியது.
அதேபோன்று கடலில் இருந்து போர்க் கப்பலைத் தாக்கும் நாசர் ஏவுகளை 35 கி. மீ. தூரம் செல்லக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணை ஒன்றை ஈரான் சோதித்திருந்தது.
அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு ஈரான் மீது அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையிலேயே ஈரான் இந்த ஏவுகணைச் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. ஈரானின் இந்த செயல் சர்வதேசத்திற்கு அபாயகரமான சமிக்ஞை என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் பெர்னாட் வலெரோ குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வளைகுடா நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் பயணிக்கும் ஹமுஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரான் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கமைய அங்கு இடம்பெற்ற ஈரான் கடற்படை பயிற்சியின்போது அது தொடர்பான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை தளபதி மஹ்மூத் மஹ்சாவி குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment