Nov 17, 2012

பெண்களை அதிகம் பாதிக்கும் கணுக்கால் வலி


தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலியானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும்.

உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும். பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஒழுங்கற்ற உதிரப்போக்கு, நாள்கடந்த மாதவிலக்கு, ஜலதோஷம் போன்றவற்றால் கணுக்காலில் வலி உண்டாகும். அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வாயு நீரானது வாத நீராக மாறி கணுக்காலில் தங்கி வலி ஏற்படுத்தும்.

இப்படி உடல் கூறுகளின் தன்மையைப் பொறுத்து கணுக்காலில் தங்கும் நீரானது உப்புப் படிவமாக மாறி கட்டிபோல் உருவாகின்றது. இதை சிலர் எலும்பு வளர்ந்திருப்பதாகக் கூறுவார்கள். உப்பும் சுண்ணாம்புச் சத்தும்

பலன்களை அள்ளித் தரும் எலுமிச்சம்பழம்!


மனிதன் ஆரோக்கியமாக நோயின்றி நீண்ட நாள் வாழ இயற்கை நமக்கு ஏராளமான செல்வங்களைத் தந்திருக்கிறது. அதிலும் எல்லாப் பருவங்களிலும் கிடைக்கக்கூடிய நிறைய பலன்களைத் தரக்கூடிய எலுமிச்சம்பழம் மிகச் சிறந்தது. உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளாக எலுமிச்சம் பழத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
உடலுக்குத் தேவையான சக்தியை இதன் மூலம் எளிதில் பெறலாம். இதில் 17.7 கலோரி அடங்கி உள்ளது. உடல் சூட்டைத் தணிக்கவும், பித்தக் கிறுகிறுப்பைப் போக்கவும் இந்தப் பழரசம் அருந்திய உடனேயே உடலில் கலந்து, புதுத் தெம்பை ஏற்படுத்துகிறது. தாது

தொப்பை குறைய...அன்னாசி பழம்.


இன்றைய காலகட்டத்தில் தொப்பை ஒரு பிரச்னையாக இருக்கிறது. அதை கரைக்கும் சக்தி ஒரு பழத்திற்கு உண்டு. அது என்ன பழம் தெரியுமா?
அந்த பழம் அன்னாசி பழம். ஓர் அன்னாசி பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து, அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இதை முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசி பழத்தில் கொழுப்பு குறைவு; நார்ச்சத்து அதிகம்; அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால், ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவற்றை நீக்குகிறது.

ஹமாஸ் தலைமையகம் மீது இஸ்ரேல் விமான தாக்குதல் : கட்டிடங்கள் தரைமட்டம்: 8 பேர் பலி



காசா: இஸ்ரேல் நேற்று நடத்திய வான் வழி தாக்குதலில் பாலஸ்தீனத்தில் காசா நகரில் ஹமாஸ் அரசு தலைமையகம் முழுமையாக சேதமடைந்தது. 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் இஸ்ரேல் 180 முறை வான் வழி தாக்குதல்களை நடத்தியது. இதுவரை காசா பகுதியிலிருந்து தீவிரவாதிகள் 580 முறை ராக்கெட்களை ஏவி தாக்குதல்களை நடத்தினர். இவற்றில் 367 ராக்கெட்டுகள் தெற்கு இஸ்ரேலை தாக்கின. 222 ராக்கெட்டுகள் வானிலேயே

ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு



டோக்கியோ,நவ.18 -  ஜப்பான் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையை கலைத்தார்  அந்நாட்டு பிரதமர் யோஷிஹிகோநோடா. அடுத்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து,இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சரவைக்  கூட்டம் நடைபெற்றதை முன்னிட்டு,நோடா பிரதமர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது பிரதிநிதிகள் அவை கலைக்கப்பட்டுள்ளது குறித்து அவர் கருத்து தெரிவித்தார். ஆட்சி குறித்து மக்களின் கருத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.
முன்னதாக பிரதிநிதிகள் அவையைக் கலைப்பதற்கானஅறிக்கையை பிரதமர்

காசாவில் மேலும் நூற்றுக்கணக்கான இலக்குகளைத் தாக்குவோம்: இஸ்ரேல்

நான்காவது நாளாக வான் தாக்குதல்கள் நீடிக்கின்றன

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 நவம்பர், 2012 - 11:48 ஜிஎம்டி

நான்காவது நாளாக வான் தாக்குதல்கள் நீடிக்கின்றன
மத்தியகிழக்கின் காசாவில் ஹமாஸையும் அதன் ஆயுததாரிகளையும் இலக்குவைத்து நான்கு நாட்களாக தொடர்ந்து குண்டுத் தாக்குதல்களை நடத்திவரும் இஸ்ரேலிய படைகள் காசாவுக்குள் தாங்கள் மேலும் நூற்றுக்கணக்கான இலக்குகளைத் தாக்கவேண்டியிருப்பதாகக்

இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: பாலஸ்தீனியர்கள் 10 பேர் பலி

இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: பாலஸ்தீனியர்கள் 10 பேர் பலிகாசா, நவ. 17-

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே 100 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியை ஆளுவதில் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக அமைதியாக இருந்த இப்பிரச்சினை மீண்டும் தலைதூக்கி இப்போது ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். இன்று பாலஸ்தீன ஹமாஸ் அரசுத் தலைமையகம் மீது இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பாலஸ்தீனியர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

நேற்று இரவு ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் முக்கியப் பகுதிகள் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இந்த பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. கடந்த புதன் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் சினிமாவை போன்ற இந்த விமானத் தாக்குதலுக்கு இதுவரை 40 பேர் கொல்லப்பட்டனர். 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீன மக்கள் தெரிவித்து உள்ளனர்.

மீண்டும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க எகிப்து மற்றும் இத்தாலி முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

கொலஸ்டிரால் பிரச்சனைக்கு இயற்கை மருந்து சப்போட்டா பழம்

News Serviceஉடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும் சப்போட்டா பழம். சத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நம் இளமைக்கும் அழகுக்கும் சப்போர்ட் தரும் சப்போட்டா பழம் பற்றி சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.
   100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால்

உடல் சூட்டை தணிக்கும் விளக்கெண்ணெய் பல்வேறு நோய்களையும் தீர்க்கும் சக்தி வாய்ந்தது


News Service கிராமப்புறங்களில் பரவலாகப் பயிரிடப்படும் தாவரம் ஆமணக்கு. கொட்டைமுத்துச் செடி என்றும் இது அழைக்கப்படும். குத்துச் செடியாக வளரும் இதன் இலைகள் முரடாகவும் சற்று அகலமாகவும் இருக்கும். இலைகளின் விளிம்பு சற்றுக் கூர்மையாக இருக்கும். வளமற்ற மண்ணிலும் வளர்ந்து பலன் கொடுக்கும் ஆமணக்கின் தண்டுப்பகுதி கூரை வேயவும், எரி பொருளாகவும் பயன்படுகின்றது.   
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
விதைகளில் ஆவியாகாத எண்ணெய் உள்ளது. இதில் கிளைசைரைடுகள், புரதம் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளன. ஆமணக்கு இலைகள், வேர்ப்பட்டை மற்றும் விதைகள் மருத்துவ பயன் உடையவை.
ஆமணக்கு வேலி
மிளகாய்ப் பயிரின் பாத்திகளிலும் ஆமணக்குச் செடியை வளர்ப்பர். ஆமணக்குச் செடியின் இலைகள் தரும் நிழல், கடும் வெயிலிலிருந்து மிளகாய்ச் செடியைப் பாதுகாக்கும் என்பதன் அடிப்படையில் கத்தரிக்காய்,

பூமியைப் போல் தண்ணீர் உடைய, உயிரினங்கள் வசிக்கத் தக்க Super earth எனும் புதிய கிரகம் வானியலாளர்களால் கண்டுபிடிப்பு



News Service பூமியில் இருந்து 42 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் 'HD 40307' எனப்பெயரிடப்பட்ட நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வலம் வரும் பூமியைப் போல் தண்ணீர் உடையதும் உயிரினங்கள் வசிக்கத் தக்கதும் ஆன Super earth எனப்படும் புதிய கிரகம் ஒன்றை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர். இந்த Super earth உடன் சேர்த்து மேலும் இரு தண்ணீர் உடைய கிரகங்களும் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் சக்தி வாய்ந்தது அத்திப்பழம்



News Service அத்திப்பழம் ஆரோக்கியமான அழகை தரக்கூடிய ஊட்டச்சத்து மிக்க பழம் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது.
  
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்பருமனை கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் பி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இது ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன. அத்திப்பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது இதற்குக் காரணம் அதில் உள்ள பொட்டாசிய சத்துதான்.
பரபரப்பான இன்றைய சூழ்நிலையில் சமைத்து உண்பதை விட ரெடி மேட்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...