Nov 17, 2012

இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: பாலஸ்தீனியர்கள் 10 பேர் பலி

இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: பாலஸ்தீனியர்கள் 10 பேர் பலிகாசா, நவ. 17-

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே 100 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியை ஆளுவதில் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக அமைதியாக இருந்த இப்பிரச்சினை மீண்டும் தலைதூக்கி இப்போது ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். இன்று பாலஸ்தீன ஹமாஸ் அரசுத் தலைமையகம் மீது இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பாலஸ்தீனியர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

நேற்று இரவு ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் முக்கியப் பகுதிகள் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இந்த பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. கடந்த புதன் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் சினிமாவை போன்ற இந்த விமானத் தாக்குதலுக்கு இதுவரை 40 பேர் கொல்லப்பட்டனர். 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீன மக்கள் தெரிவித்து உள்ளனர்.

மீண்டும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க எகிப்து மற்றும் இத்தாலி முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...