உடலுக்குத் தேவையான சக்தியை இதன் மூலம் எளிதில் பெறலாம். இதில் 17.7 கலோரி அடங்கி உள்ளது. உடல் சூட்டைத் தணிக்கவும், பித்தக் கிறுகிறுப்பைப் போக்கவும் இந்தப் பழரசம் அருந்திய உடனேயே உடலில் கலந்து, புதுத் தெம்பை ஏற்படுத்துகிறது. தாது உப்புக்கள் இதில் மிகுதியாக இருப்பதால் வாத நோயால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்தப் பழச்சாறை மூன்று (அ) நான்கு வேளை தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் வாதம் குணம் அடையும். இதில் இருக்கும் மாங்கனீசியச் சத்து பற்களில் உள்ள எனாமலை மேலும் வலுப்படுத்துகிறது. உடலின் வளர்ச்சி குறையாமல் இருப்பதற்கும், உயிர் அணுக்கள் சிதையாமல் இருப்பதற்கும் பாஸ்பரஸ் மிக அவசியம். இது எலுமிச்சையில் அதிகமாக உள்ளது.
எலுமிச்சம்பழத்தைப் பயன்படுத்தி நிறைய நோய்களிலிருந்து நாம் நிவாரணம் பெறலாம். உடல் அரிப்பு, தடிப்பு, அலர்ஜி இவைகளுக்கு எலுமிச்சைச்சாறு 30 மி.லி., தேன் 30 மி.லி., தண்ணீர் 150 மி.லி., கலந்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இவைகள் நீங்கி விடும். கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சம் பழச்சாறை தினசரி தக்காளிப்பழம், தேன், தண்ணீர் இவைகளுடன் கலந்து ஒரு நாளைக்கு 2 (அ) 3 வேளை குடித்து வந்தால் கல்லீரலினால் ஏற்படும் சீரழிவை அகற்றி மூளை, இதயம், இரைப்பை, சிறுநீர்ப்பை, ஜீரண மண்டலம் முதலிய உறுப்புகளை நல்ல நிலையில் இயங்கச் செய்யலாம்.
பல் ஈறுகளில் ரத்தம், சீழ் வடிந்தால் ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தை பல் ஈறுகளில் நன்றாக அழுத்தி தேய்த்தால் துர்நாற்றம் வராததுடன் ரத்தம் வருவதும் தடுக்கப்படும். பசி மந்தம், ருசியின்மை, வாயுப் பிரச்சனை, உடல் மதமதப்பு, நரம்புத் தளர்ச்சி, மந்த புத்தி இவைகளுக்கு நீர் மோரில் ஒரு எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி, பெருங்காயம், கொத்துமல்லி இலை இவைகளைப் போட்டு தினமும் 3 (அ) 4 முறை அருந்தினால் பலன் தெரியும். பேதி, வாந்தி ஏற்பட்டு சரீரத்தில் நீர்த்தன்மை குறைந்து உடலில் அபாய நிலை ஏற்படுவது உண்டு. இதற்கு கஞ்சியில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அடிக்கடி கொடுக்க வேண்டும். இதனால் நோயாளிக்குத் தெம்பு ஏற்படும். எலுமிச்சம்பழச் சாற்றில் சிறிது உப்புக் கலந்து தலைக்கு தேய்த்து ஊறிய பிறகு குளித்து வந்தால், தலை அரிப்பு, பேன், முடி கொட்டுதல், செம்பட்டை முடி இவைகள் குணமாகும்.
தினசரி உணவில் எலுமிச்சை ஊறுகாயை சேர்த்துக் கொண்டால் நரை, திரை அண்டாது. ஆகாரமும் நன்கு ஜீரணமா
No comments:
Post a Comment