டோக்கியோ,நவ.18 - ஜப்பான் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையை கலைத்தார் அந்நாட்டு பிரதமர் யோஷிஹிகோநோடா. அடுத்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து,இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதை முன்னிட்டு,நோடா பிரதமர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது பிரதிநிதிகள் அவை கலைக்கப்பட்டுள்ளது குறித்து அவர் கருத்து தெரிவித்தார். ஆட்சி குறித்து மக்களின் கருத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.
முன்னதாக பிரதிநிதிகள் அவையைக் கலைப்பதற்கானஅறிக்கையை பிரதமர்
தயாரித்தார். இதற்து அந்நாட்டு மன்னரும், அரசியல் சாசன சட்டத்தின் தலைவருமான அகிஹிடோ ஒப்புதல் அளித்தார். பின்னர் அந்த அறிக்கையை கீழவைத் தலைவர் வாசித்தார். டிசம்பர் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.
முன்னதாக இரட்டை விற்பனை வரி விதிப்பு தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் பிரச்சினை ஏற்பட்டது.இதையடுத்து எதிர்க்கட்சிகளுடன் பல மாதங்கள் பேச்சு நடத்தி மசோதாவுக்கு அவர்களது ஆதரவைப் பெற்று நிறைவேற்றினார்.
ஆனால் நோடாவின் ஜப்பான் ஜனநாயகக் கட்சியிலேயே சிலர் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.இதனால் அவருக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த அவர் முடிவு செய்தார்.
No comments:
Post a Comment